தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?

Go down

இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?  Empty இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?

Post  meenu Fri Feb 01, 2013 1:29 pm

இதுபோன்ற பிரச்னைகளுடன் நிறைய கடிதங்கள் வருகின்றன. எல்லோருடைய சார்பாகவும் இதை படிக்கலாம். எல்லா பிரச்னைகளுக்கும் இரு வடிவங்கள் உண்டு. ஒன்று ஸ்தூலம். மற்றொன்று சூட்சுமம். இப்போது உங்களுக்கு மருத்துவர் என்னென்ன ஆலோசனைகள் சொல்கிறாரோ, அவற்றை முதலில் செய்யுங்கள். அதில் வெற்றியை இறைவன் ஏற்படுத்துவார். ‘தெய்வேன மநுஷ ரூபேயா’ என்பது பெரிய அர்த்தம் உடைய வாக்கியம்.

மருத்துவர்களே, ‘‘நாங்க ரொம்ப பயந்தோம். கடவுள் அருளால நீங்க பிழைச்சிட்டீங்க’’ என்று சொல்வதை அடிக்கடி கேட்கிறோம் அல்லவா? இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து பூரண குணம் பெறுவதற்கென்றே ஓர் ஆலயம் உள்ளது. அந்த தலத்திற்கு திருநின்றவூர் என்று பெயர். இத்தலம் சென்னை-திருவள்ளூருக்கு அருகில் உள்ளது.

இறைவனின் திருப்பெயரே இருதயாலீஸ்வரர். பூசலார் நாயனார் மானசீகமாகக் கட்டிய ஆலயத்தில் உறைந்த சிவபெருமான் இவர். இந்த ஈசனை நிறைய வில்வங்களால் அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள். இதயத்தில் பிரச்னை உள்ளது என்று நினைப்போரும், இனி தனக்கு வரக்கூடாது என்று பிரார்த்திப்போரும்கூட இத்தலத்திற்கு சென்று வரலாம். வீட்டில் பைரவர் படத்தை வைத்து அதன்முன் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்:

வடுகம் பாது ஹ்ருதயே ஆபதுத்தாரணாயச விச்வநாதஸ் ஸதாபாது ஸர்வாஸ்கே மம ஸர்வதா - என்று சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை சொல்லி மூன்று இதழ்கள் கொண்ட வில்வத்தால் அர்ச்சியுங்கள். இறுதியில் எள் சாதத்தை நிவேதனம் செய்யுங்கள்.

அஸிதாங்க பைரவாய நமஹ
ருருபைரவாய நமஹ
சண்ட பைரவாய நமஹ
க்ரோத பைரவாய நமஹ
உன்மத்த பைரவாய நமஹ
கபால பைரவாய நமஹ
பீஷண பைரவாய நமஹ
ஸம்ஹார பைரவாய நமஹ
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் வயது 45. வழக்கம்போல ஒருநாள் கடையிலிருந்து வீட்டிற்கு வந்து உட்கார்ந்த என்னால் மீண்டும் எழுந்திருக்கவே முடியவில்லை. இரண்டு கைகளும், கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை எடுத்துவருகிறேன். விரைவில் குணமடைய நான் என்ன பரிகாரம் மேற்கொள்ள வேண்டும்?
»  திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று
»  என் வயது 27. அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. 45 நாள் சென்றதும் யாரோ விரட்டி அடிப்பதுபோல பிரமை இருந்தது. மனநல டாக்டரிடம் வைத்தியம் பார்த்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மருந்து சாப்பிடுகிறேன். ஆனாலும் தூக்கம் இல்லாது அவதிப்படுகிறேன். என்ன செய்ய
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
» நான் பூப்படைந்த நாள் முதலே வயிற்று வலியால் வேதனைப்படுகிறேன். எனக்குத் திருமணமாகி மகன் உள்ளான். ஆனாலும் எத்தனை சிகிச்சை செய்தாலும், அந்த நேரத்துக்கு ஏதோ சரியானதுபோல இருக்கிறது; மீண்டும் தொடருகிறது. இந்த நோயிலிருந்து குணமாக என்ன பரிகாரம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum