தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


இந்த வார விசேஷங்கள் (5-2-2013 முதல் 11-2-2013 வரை)

Go down

இந்த வார விசேஷங்கள் (5-2-2013 முதல் 11-2-2013 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (5-2-2013 முதல் 11-2-2013 வரை)

Post  ishwarya Fri May 24, 2013 12:39 pm

5-ந் தேதி (செவ்வாய்)

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
* திரைலோகிய கவுரி விரதம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் சுவாமி புஷ்கரணியில் தெப்ப உற்சவம்.
* சம நோக்கு நாள்.

6-ந் தேதி (புதன்)

* சர்வ ஏகாதசி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல், அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு.
* சம நோக்கு நாள்.

7-ந் தேதி (வியாழன்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீப உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* வேதாரண்யம் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
* கீழ் நோக்கு நாள்.

8-ந் தேதி (வெள்ளி)

* மாத சிவராத்திரி.
* பிரதோஷம்.
* சங்கரன்கோவில் கோமதி அமமன் தெப்பம்.
* திருவாவடுதுறை ரத சப்தமி உற்சவம் ஆரம்பம்.
* திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் பிரதோஷ வழிபாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், தங்க பல்லக்கில் பவனி வருதல்.
* திருவிடைமருதூர் பிரகாத் குசாம்பிகை புறப்பாடு.
* கீழ் நோக்கு நாள்.

9-ந் தேதி (சனி)

* தை அமாவாசை.
* நெல்லை அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி வருசாபிஷேகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம், ரிஷப வாகனம், தை அமாவாசை.
* வேதாரண்யம் சிவபெருமான் பவனி.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் விபீசன ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் புறப்பாடு.
* மேல் நோக்கு நாள்.

10-ந் தேதி (ஞாயிறு)

* கீழ் திருப்பதி கோவிந்தராஜபெருமாள் சன்னிதி எதிரில் அனுமாருக்கு திருமஞ்சன சேவை.
* கல்லிடைக்குறிச்சி சிவபெருமான் பவனி.
* கோமதீஸ்வரர் திருக்கோவில் அகத்தியர் தேவார திரட்டு முற்றோதுதல். அகத்தியருக்கு சிறப்பு வழிபாடு.
* மேல் நோக்கு நாள்.

11-ந் தேதி (திங்கள்)

* திருநாங்கூரில் 11 கருட சேவை.
* கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருட ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு.
* மதுரை தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் கொடியேற்றம்.
* மேல் நோக்கு நாள்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum