தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வார விசேஷங்கள் (12-3-2013 முதல் 18-3-2013 வரை)

Go down

 இந்த வார விசேஷங்கள் (12-3-2013 முதல் 18-3-2013 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (12-3-2013 முதல் 18-3-2013 வரை)

Post  ishwarya Thu May 23, 2013 5:27 pm

12-ந் தேதி (செவ்வாய்)

*திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல். * மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் பரமபத நாதன் திருக்கோலம்.
* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.
* நெல்லை டவுண் கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலில் ஐந்து கருடோற்சவம்.
*திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா வருதல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசரகலசாபிஷேகம். * மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை, இரவு தங்க கருடன் வைகுண்டநாதன் சேவை அருளல்.
* மேல் நோக்கு நாள்.

14-ந் தேதி (வியாழன்)

* காரடையான் நோன்பு.
* திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் கிரி பிரதட்சணம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை காலிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமந்த வாகனத்தில் ராமர் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.
* திருவாவடுதுறை கோமதீஸ்வரர் திருக்கோவில் உருத்திராபிஷேகம், திருநந்தி தேவர், திருமூலர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

15-ந் தேதி (வெள்ளி)

* சதுர்த்தி விரதம்.
* மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் பவனி.
*மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்கார காட்சி அளித்தல்.
* பிள்ளையார்பட்டி விநாயக பெருமான் கோவில் பிரகாரத்தில் பவனி.
* திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நமசிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு.
* சமநோக்கு நாள்.

16-ந் தேதி (சனி)

* மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் காலை ராஜாங்க அலங்காரம், இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
*திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி சூர்ணோர்ச்சவம், இரவு கோ ரதம், புஷ்ப பல்லக்கு ஆகியவைகளில் கல்யாண திருக்கோலமாய் காட்சி.
* சம நோக்கு நாள்.

17-ந் தேதி (ஞாயிறு)

* நெல்லை, பழனி, குன்றக்குடி தலங்களில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் கோவிலில் பங்குனி உற்சவம் தொடக்கம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி நவநீத சேவை, வெண்ணெய் தாழி திருக்கோலம், இரவு தங்க குதிரையில் ராஜாங்க அலங்காரம்.
* திருவாலங்காடு வடாரண்டேஸ்வரம் திருக்கோவில், திருமங்கலக்குடி பிராணநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திரம் கொடியேற்றம்.
* கீழ்நோக்கு நாள்.

18-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.
* நெல்லை டவுண் கரிய மாணிக்கப் பெருமான் ரதம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கிருஷ்ணா அவதாரம், இரவுகருட வாகனத்தில் காட்சியருளல்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரத உற்சவம்.
* திரிசிராமலை தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
* மேல் நோக்கு நாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum