தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வார விசேஷங்கள் (16-4-2013 முதல் 22-4-2013 வரை)

Go down

 இந்த வார விசேஷங்கள் (16-4-2013 முதல் 22-4-2013 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (16-4-2013 முதல் 22-4-2013 வரை)

Post  ishwarya Wed May 22, 2013 5:29 pm

16-ந் தேதி (செவ்வாய்)

* நெல்லை டவுன் லட்சுமிநரசிங்க பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

* நெல்லை, திருச்செந்தூர், திருவையாறு, கும்பகோணம், காஞ்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை தலங்க ளில் உற்சவம் ஆரம்பம்.

* குடந்தை ராமபிரான் யானை வாகனத்தில் பவனி.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கயிலாச காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் புருசத்திலும், அம்பாள் காமதேனு வாக னத்திலும் திருவீதி உலா.

* சமயபுரம் மாரியம்மன் திருத்தேர், அக்கினி சட்டி வழிபாடு.

* சமநோக்கு நாள்.

17-ந் தேதி (புதன்)

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங் கப் பல்லக்கில் வீதி உலா.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் உற்சவம் ஆரம்பம், சிம்ம வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* குடந்தை ராமபிரான் சூர்ணாபிஷேகம், புன்னை மர வாகனத்தில் பவனி. * தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் அம்பாள் சம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல், சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.

* மேல்நோக்கு நாள்.

18-ந் தேதி (வியாழன்)

* நாங்குநேரி வானமாமலை பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்வேடர்பறி லீலை, குதிரை வாகனத்தில் பவனி.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் திருவீதி உலா.

* சமயபுரம் மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு.

* குடந்தை ராமபிரான் வெண்ணை தாழி சேவை.

* சமநோக்கு நாள்.

19-ந் தேதி (வெள்ளி)

* ராமநவமி

* சமயபுரம் மாரியம்மன் தெப்ப உற்சவம்.

* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மயில் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி.

* குடந்தை ராமபிரான் ரத உற்சவம்.

* திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ரிஷப வாகனத்தில் திருவீதி உலா

* மேல் நோக்கு நாள்.

20-ந் தேதி (சனி)

* திருமலை- திருப்பதி திருப்படி விழா

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் வீதி உலா.

* கீழ்நோக்கு நாள்.

21-ந் தேதி (ஞாயிறு)

* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரம ணிய சுவாமி கோவிலில் காலை சண்முகர் உருகு சட்ட சேவை, மாலையில் தங்க சப்பரத்தில் பவனி.

* மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்.

* மதுரை கள்ளழகர் உற்சவம் ஆரம்பம்.

* குடந்தை ராமபிரான் விடையாற்று உற்சவம்.

22-ந் தேதி (திங்கள்)

* மதுரை மீனாட்சி அம்மன் திக் விஜயம்

* திருவள்ளூர் வீரராகவர் காலை வேணுகோபாலன் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் பவனி.

* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் அனுமந்த வாகனத்தில் சூர்ணாபிஷேகம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum