ஹஸ்சி, விஜய் பேட்டிங் மகிழ்ச்சி அளிக்கிறது: கேப்டன் டோனி பாராட்டு
Page 1 of 1

6-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் வெற்றியை ருசித்தது. மொகாலியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 138 ரன் எடுத்தது. அந்த அணியின் கடைசி 3 விக்கெட்டுகள் 32 ரன்னில் விழுந்தது பரிதாபமே. டேவிட் ஹஸ்சி அதிகபட்சமாக 36 பந்தில் 41 ரன் எடுத்தார். பிராவோ 3 விக்கெட்டும், கிறிஸ் மாரிஸ், நானஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 16 பந்து எஞ்சி இருந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 139 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மைக் ஹஸ்சி 54 பந்தில் 86 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), முரளி விஜய் 50 பந்தில் 50 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மைக்ஹஸ்சி 3 முறை அவுட்டில் இருந்து தப்பியது அதிர்ஷ்டமே.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி முதல் முறையாக 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-
பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். குறிப்பாக வேகப்பந்து வீரர்கள் அபாரமாக வீசினார்கள். அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். மைக்ஹஸ்சி- முரளி விஜய் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஒட்டு மொத்தமாக அனைத்தும் சிறப்பாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. பேட்டிங் நன்றாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் கூறும்போது, எங்களது பேட்டிங், பவுலிங் சிறப்பாக அமையவில்லை. நாங்கள் சில கேட்ச் மற்றும் ரன்அவுட் வாய்ப்பை தவறவிட்டோம் என்றார்.
சென்னை அணி பெற்ற முதல் வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் தோற்றது. சென்னை அணி 3-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வருகிற 13-ந்தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் புனே அணியை வென்று இருந்தது. 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வருகிற 14-ந்தேதி சந்திக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எனது கடைசி ஓவரே தோல்விக்கு காரணம்: பஞ்சாப் கேப்டன் டேவிட் ஹஸ்சி வேதனை
» ஐதராபாத் அணி 5-வது வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஒயிட் பாராட்டு
» விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் மகேஷ்பாபு பேட்டி
» நேபாள நாட்டு கிரிக்கெட் தூதராக இந்திய கேப்டன் டோனி!
» ஜடேஜா சிறந்த மேட்ச்வின்னர்: டோனி, பிளமிங் பாராட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum