எனது கடைசி ஓவரே தோல்விக்கு காரணம்: பஞ்சாப் கேப்டன் டேவிட் ஹஸ்சி வேதனை
Page 1 of 1

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது.
கேப்டன் ரோகித்சர்மா 39 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 79 ரன்னும் (அவுட்இல்லை), சுமித் 33 ரன்னும் எடுத்தனர். கடைசி 5 ஓவரில் மும்பை அணி 72 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 170 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் மும்பை அணி 4 ரன்னில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்டது. பஞ்சாப் அணி 12 ரன் எடுத்தது. கடைசி பந்தில் பிரவீண்குமார், தெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதேபோல பஞ்சாப் வீரர் மில்லரை தெண்டுல்கர் கேட்ச் பிடித்ததும் திருப்பு முனையாகும்.
மில்லர் 34 பந்தில் 56 ரன்னும், கேப்டன் டேவிட்ஹஸ்சி 18 பந்தில் 34 ரன்னும் எடுத்தனர். ஹர்பஜன் 3 விக்கெட்டும், ஒஜா, குல்கர்னி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த தோல்வி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் டேவிட் ஹஸ்சி கூறியதாவது:- 4 ரன்னில் தோற்றது எனது மனதுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. வேதனை தருகிறது. பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. எனது கடைசி ஓவர் ஏமாற்றம் அளித்தது. எனது இந்த ஓவர்தான் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
டேவிட்ஹஸ்சி வீசிய 20-வது ஓவரில் மும்பை அணி 27 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 3 சிக்சரும், 2 பவுண்டரியும் அடித்தார். ரோகித்சர்மாவுக்கு இன்று 26-வது பிறந்தநாள் ஆகும். பிறந்தநாள் பரிசாக இந்த வெற்றி கிடைத்ததாக குறிப்பிட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹஸ்சி, விஜய் பேட்டிங் மகிழ்ச்சி அளிக்கிறது: கேப்டன் டோனி பாராட்டு
» கடைசி 6 ஓவரில் ஆட்டத்தை இழந்தோம்: வீராட் கோலி வேதனை
» கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்தார் கேப்டன் தோனி!
» படத்தின் தோல்விக்கு கதாநாயகன் காரணமல்ல : வெங்கட் பிரபு
» தோல்விக்கு டெல்லி அணி முற்றுப்புள்ளி வைக்குமா?-பெங்களூருடன் இன்று மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum