ஜடேஜா சிறந்த மேட்ச்வின்னர்: டோனி, பிளமிங் பாராட்டு
Page 1 of 1

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 119 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் காம்பீர், யூசுப்பதான் தலா 25 ரன் எடுத்தனர். ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 பந்து எஞ்சி இருந்த நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் மைக்ஹஸ்சி 40 ரன்னும், ஜடேஜா 14 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 4-வது வெற்றியாகும்.
இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ஜடேஜாவை கேப்டன் டோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பாராட்டி யுள்ளானர். இது குறித்து டோனி கூறியதாவது:-
எங்களது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. பேட்டிங் சீரான நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கொல்கத்தா அணி முதல் 6 ஒவரில் சிறப்பாகவே பேட்டிங் செய்தது. சில விக்கெட்டுகள் விழுந்ததன் மூலமும், ரன் அவுட் மூலமும் ஆட்டம் எங்கள் பக்கம் வந்தது. ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் சிறந்த மேட்ச் வின்னராக திகழ்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜடேஜாவின் ஆட்டத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் சிறந்த மேட்ச் வின்னராக உருவாகி வருகிறார். அவர் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. நம்பிக்கை அளிக்க கூடிய வீரராக அவர் உள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.
இவ்வாறு பிளமிங் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புனே அணியுடன் இன்று மோதல்: டோனி சிறந்த மேட்ச்வின்னர்- ரெய்னா
» ஹஸ்சி, விஜய் பேட்டிங் மகிழ்ச்சி அளிக்கிறது: கேப்டன் டோனி பாராட்டு
» இன்றைய போட்டியில் கெய்லுக்கு அஸ்வின் நெருக்கடி கொடுப்பார்: பயிற்சியாளர் பிளமிங்
» ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்: வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்- பிளமிங்
» சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி..? இதை படித்து நீங்களும் சிறந்த அம்மா ஆகிடுங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum