ஐதராபாத் அணி 5-வது வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஒயிட் பாராட்டு
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5-வது வெற்றியை பெற்றது. நேற்று நடந்த 25-வது `லீக்' ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் கில்கிறிஸ்ட் அதிகபட்சமாக 26 ரன் எடுத்தார். இஷாந்த்சர்மா, அமித் மிஸ்ரா, கரன் சர்மா ஆகியோர் தலா 2விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய ஐதராபாத் 7 பந்து எஞ்சி இருந்த நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விகாரி 39 பந்தில் 46 ரன்னும், பெரைரா 11 பந்தில் 23 ரன்னும் எடுத்தனர். ஐதராபாத் அணி பெற்ற 5-வது வெற்றியாகும்.
இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணியின் தற்காலிக கேப்டன் கேமரூன் ஒயிட் கூறியதாவது:-
பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, ஸ்டெய்ன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். விகாரியின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. எங்கள் அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
இவ்வாறு ஒயிட் கூறினார்.
தோல்வி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-
விக்கெட்டுகள் மளமள என்று சரிந்ததே திருப்பு முனையாகும். 140 ரன் எடுத்து இருந்ததால் நன்றாக இருந்து இருக்கும். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பேட்டிங் தான் சரியில்லை. மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹஸ்சி, விஜய் பேட்டிங் மகிழ்ச்சி அளிக்கிறது: கேப்டன் டோனி பாராட்டு
» மும்பைக்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» வெற்றி வீரர் கேப்டன் விஜயகாந்த்
» கொல்கத்தா அணி 2-வது வெற்றி: அதிரடியாக ஆடிய மார்கனுக்கு காம்பீர் பாராட்டு
» கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்தார் கேப்டன் தோனி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum