ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி புனே வாரியர்ஸ் முதல் வெற்றி பெற்றது
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 13-வது லீக் புனேவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் புனே வாரியர்ஸ்- ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ராகுல் டிராவிட் பேட்டிங் தேர்வு செய்தார்.
குஷால் பெரேரா- ரகானே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெரேரா முதல் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டாகி வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் டிராவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். ரகானே 30 ரன்கள் எடுத்திருக்கும்போது ராகுல் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து டிராவிட்டுடன் பி்ன்னி ஜோடி சேர்ந்தார். டிராவிட் அரை சதம் அடித்ததுடன் 54 ரன்களில் ஆட்டம் இழந்தார். பி்ன்னி 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த ஹாட்ஜ் 22, பால்க்னர் 19 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது.
146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனேவாரியர்ஸ் அணியின் உத்தப்பா- பின்ச் களம் இறங்கினார்கள். இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்கள். இதனால் ரன் விகிதம் ஓவருக்கு 10 என அதிகரித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஓவரிலேயே 50 ரன்னை கடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5.5 ஓவரில் 58 ரன் எடுத்திருக்கும்போது உத்தப்பா 32 ரன்னில் அவுட் ஆனார். அவர் 16 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.
அடுத்து 2-வது விக்கெட்டுக்கு பின்ச் உடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். பின்ச் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். மறுமுனையில் டெய்லர் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்ச் 64 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியின் திரும்பினார்.
4-வது விக்கெட்டுக்கு யவராஜ் சிங்- மாத்யூஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து 18.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து புனே வாரியர்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தனர். இதனால் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றி இதுவாகும்.
யுவராஜ் சிங் 28 ரன்னுடனும், மாத்யூஸ் 1 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி 2-வது வெற்றி பெற்றது
» 24 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது புனே வாரியர்ஸ்
» மீண்டும் பெங்களூர் அணியிடம் சரணடைந்தது புனே வாரியர்ஸ்
» இன்றைய போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கெய்லின் அதிரடி தொடருமா?
» வாட்சன் அதிரடியால் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum