மீண்டும் பெங்களூர் அணியிடம் சரணடைந்தது புனே வாரியர்ஸ்
Page 1 of 1

ஐ.பி.எல். போட்டியின் இன்றைய 2-வது லீக் புனேவில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக திவாரி- கெய்ல் களம் இறங்கினர். புனே அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சதம் அடித்த கெய்ல் இதில் 21 ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த விராட் கோலி 18 பந்தில் 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடக்க வீரர் திவாரி 45 பந்தில் 52 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அப்போது பெங்களூர் அணி 15.1 ஓவரில் 119 ரன் எடுத்திருந்தது. அடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ்- ஹென்ரிக்ஸ் புனே வாரியர்ஸ் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்கள். இதனால் பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் குவித்தது. கடைசி 29 பந்தில் 68 ரன் எடுத்தது பெங்களூர். டி வில்லியர்ஸ் 23 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னுடனும், ஹென்ரிக்ஸ் 13 பந்தில் பவுண்டரி, 1 சிக்சருடன் 27 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் புனே வாரியர்ஸ் அணியின் உத்தப்பா- பின்ச் களம் இறங்கினார்கள். பின்ச் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் உத்தப்பா நம்பிக்கையுடன் விளையாடினார். இருந்தாலும் அவர் 75 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அதன்பின் புனே வாரியர்ஸ் அணியின் தோல்வி உறுதியானது. 20 ஓவர் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் பெங்களூர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 24 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது புனே வாரியர்ஸ்
» புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி 2-வது வெற்றி பெற்றது
» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி புனே வாரியர்ஸ் முதல் வெற்றி பெற்றது
» இன்றைய போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கெய்லின் அதிரடி தொடருமா?
» பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தியது ஹைதராபாத்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum