வாட்சன் அதிரடியால் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான்
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 36-வது லீக் இன்று மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஆக்சாத் ரெட்டி- தவான் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சண்டிலா வீசினார். முதல் ஓவரின் 5-வது பந்தில் ரெட்டி 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து தவானுடன், ஐதராபாத் கேப்டன் சங்கக்காரா ஜோடி சேர்ந்தார். இரண்டாவது ஓவரை பால்க்னர் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் சங்கக்காரா 4 ரன்னிலும், 6-வது பந்தில் தவான் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த விகாரி, சர்மா விக்கெட்டையும் பால்க்னர் கைப்பற்றினார். இதனால் ஐதராபாத் 29 ரன்கள் எடுப்பதற்குள் 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.
7-வது விக்கெட்டுக்கு சமி- மிஸ்ரா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் 50 ரன்னுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐதராபாத் 50 ரன்களை தாண்டியது. சிறப்பாக விளையாடி மிஸ்ரா 21 ரன் சேர்த்தார். சமி 60 ரன்கள் எடுத்தார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் பால்க்னர் சிறப்பாக பந்து வீசி 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த ஐ.பி.எல். சீசனில் முதன் முறையாக இந்த போட்டியில்தான் ஒரு பவுலர் 5 விக்கெட் வீழ்த்திய குறிப்பிடத்தக்கது.
பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் டிராவிட்- ரகானே களம் இறங்கினார்கள். ரகானே 1 ரன் எடுத்த நிலையில் ஸ்டெய்ன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து டிராவிட்டுடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் ஐதராபாத் அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினர். டிராவிட் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து பின்னி வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் ராஜஸ்தான் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். இதனால் ராஜஸ்தான் 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வாட்சன் 98 (13 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்களுடனும், பின்னி 9 ரன்னுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிங்ஸ் லெவன் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது
» 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்
» 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை
» ஜடேஜா அதிரடியால் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது
» கெய்ல் அதிரடியால் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum