தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி 2-வது வெற்றி பெற்றது

Go down

புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி 2-வது வெற்றி பெற்றது Empty புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி 2-வது வெற்றி பெற்றது

Post  ishwarya Sat May 04, 2013 12:07 pm

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 39-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தொடங்கியது. இப்போட்டியில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் டெல்லி டேர்டெவில்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணியைச் சேர்ந்த ஜெயவர்த்தனே- சேவாக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜெயவர்த்தனே 12 ரன்னிலும், சேவாக் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த வார்னர் 25 பந்தில் 51 ரன்கள் அடிக்க டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் உத்தப்பா- பின்ச் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தலா 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்தவர்கள் சொதப்பியதால் புனே வாரியர்ஸ் அணியால் 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் டெல்லி அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். யுவராஜ் 31, ரைட் 19 ரன்களில் அவுட் ஆனார்கள். சுமித்த 17 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி புனே வாரியர்ஸ் முதல் வெற்றி பெற்றது
» 24 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது புனே வாரியர்ஸ்
» மீண்டும் பெங்களூர் அணியிடம் சரணடைந்தது புனே வாரியர்ஸ்
» இன்றைய போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கெய்லின் அதிரடி தொடருமா?
» பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தியது ஹைதராபாத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum