24 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது புனே வாரியர்ஸ்
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை- புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதிக்காததால் மாத்யூஸ் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக டெய்லர் கேப்டன் பதவி வகித்தார்.
புனே அணியின் தொடக்க வீரர்கள் பின்ச்- உத்தப்பா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பின்ச் 45 பந்தில் 2 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். உத்தப்பா 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த டெய்லர் 8, மார்ஷ் 2, பாண்டே 9 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆனாலும், சுமித் 16 பந்தில் 39 ரன்கள் அடிக்க புனே வாரியர்ஸ் அணி 5 விக்கெட் இழப்றிகு 159 ரன்கள் எடுத்தது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அனிருதா ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து விஜயுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். ரெய்னா 8 ரன்னில் புவனேஷ்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு விஜய் உடன் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். இருந்தாலும் விஜய் 24, பத்ரிநாத்த 34 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
அதன்பின் வந்த ஜடேஜா 27 ரன்னிலும், டோனி 10 ரன்னிலும் அவுட்டாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் புனே வாரியர்ஸ் அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனே வாரியர்ஸ் அணிக்கு இது இரணடாவது வெற்றியாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை
» புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி 2-வது வெற்றி பெற்றது
» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி புனே வாரியர்ஸ் முதல் வெற்றி பெற்றது
» பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தியது ஹைதராபாத்
» 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum