சேவாக் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணிக்கு முதல் வெற்றி
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 28-வது லீக் போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி தொடங்கியது. இப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதுவரை நடந்த போட்டியில் ஜொலிக்காததால் பாண்டிங் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. அவருக்குப் பதிலாக டிவைன் சுமித்- தெண்டுல்கருடன் தொடக்க வீரராக களம் இறங்கினார். 8 ரன் எடுத்த நிலையில் டிவைன் சுமித் அவுட் ஆனார். அடுத்து 2-வது விக்கெட்டுக்கு தெண்டுல்கருடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கார்த்திக் எதிர்பாராத விதமாக (2 ரன்) ரன் அவுட் ஆனார்.
அடுத்து 3-வது விக்கெட்டுக்கு தெண்டுல்கருடன், ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். தெண்டுல்கர் 54 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சர்மா 73 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும்.
அடுத்து வந்த பொல்லார்டு 10 பந்தில் 19 ரன் அடிக்க மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் குவித்தது.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சேவாக்- ஜெயவர்த்தனே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் மும்பை அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்கள்.
இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் ஓவருக்கு 10 ரன் சராசரியாக வந்தது. 4.5 ஓவரில் 50 ரன்னைக் கடந்த டெல்லி அணி 9.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது.
சேவாக் 31 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரை சதம் அடித்தார். ஜெயவர்த்தனே 34 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதம் அடித்தார். தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடியதால் டெல்லி 15.3 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.
அந்த அணியின் ஸ்கோர் 150 ரன்னாக இருக்கும்போது ஜெயவர்த்தனே 59 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வார்னர் களம் இறங்கினார். 17 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. சேவாக் 57 பந்தில் 95 ரன் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்த சீசனில் ஒரு போட்டியில் தனிப்பட்ட வீரர் அடித்த அதிகபட்ச் ரன் இதுவாகும். வார்னர் 7 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி ஐ.பி.எல். சீசன்-6ல் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐதராபாத்துடன் இன்று மோதல்: டெல்லி அணி முதல் வெற்றி பெறுமா?
» இன்றைய போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கெய்லின் அதிரடி தொடருமா?
» சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி: கொல்கத்தா 48 ரன் வித்தியாசத்தல வெற்றி
» புனே அணிக்கு எதிரான போட்டி: மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum