தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி

Go down

 பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி  Empty பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி

Post  ishwarya Sat May 04, 2013 1:00 pm

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 11வது லீக் மேட்ச் மொஹாலியில் பஞ்சாப்-சென்னை அணிக்கும் இடையே இரவு 8 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியை சேர்ந்த கில்கிறிஸ்ட், மந்திர் சிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தலா 9 ரன் எடுத்து நானஸ் பந்தில் அவுட் ஆனார்கள். அடுத்த வந்த ஓரா 16 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

4 வது விக்கெட்டுக்கு டேவிட் ஹஸி, குர்கீரத் சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஓரளவுக்கு தாக்குபிடித்து விளையாடினார்கள். ஹாஸி 41 ரன்னிலும் குர்கீரத் சிங் 31 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அப்போது பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 116 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

சென்னை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பிராவோ 3 விக்கெட்டுகளை எடுத்தார். கடைசி 5 ஓவர்களில் 22 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பஞ்சாப் இழந்தது.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மைக் ஹஸி, விஜய் இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இவர்களது விக்கெட்டுகளை வீழ்த்த பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் பந்து வீச்சை மாற்றி அமைத்தார். ஆனால் அது பயனளிக்கவில்லை. இருவரும் நிலைத்து நின்று விளையாடி வெற்றி பெற செய்தனர்.

சென்னை அணி 17.2 ஓவரில் 139 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மைக் ஹஸி 86 ரன்கள், விஜய் 50 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் சென்னை அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லிக்கு எதிரான ஆட்டம்: பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» மும்பைக்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» கொல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல். போட்டி: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» புனே அணிக்கு எதிரான போட்டி: மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum