புனே அணிக்கு எதிரான போட்டி: மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Page 1 of 1

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியின் மும்பை- புனே வாரியர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தெண்டுல்கர்- பாண்டிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் மூன்று போட்டிகளிலும் சொதப்பிய தெண்டுல்கர் இப்போட்டியில் அதிரடியாக விளையாடினார்.
பாண்டிங் வழக்கம்போல் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து தெண்டுல்கருடன், கார்த்திக் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய தெண்டுல்கர் 29 பந்தில் 44 ரன்கள் எடுத்திருக்கும்போது பின்ச் பந்தில் மார்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 7 பவுண்டரி, 1 சிக்ஸ் அடங்கும்.
அடுத்து கார்த்திக்குடன் ரோகித் சர்மா 3-வது விக்கெட்டு ஜோடி சேர்ந்தனர். மும்பை அணி 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 எடுத்திருந்தது. தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.
கார்த்திக் 29 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். அடுத்து 4-வது விக்கெட்டுக்கு சர்மாவுடன், பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மான சிக்கர் மழையாக பொழிந்தார்.
அவரது அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட இழப்பிற்கு 183 ரன் குவித்தது. ரோகித் சர்மா 32 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ரன்களுடனும், பொல்லார்டு 14 பந்தில் 1 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் புனே அணி பேட்டிங்கை தொடங்கியது. முதல் ஓவரை ஜான்சன் வீசினார். முதல் பந்திலேயே பின்ச் கிளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்களும் சரியாக விளையாடாமல் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர். இதனால் புனே வாரியர்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆகவே மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புனே அணியில் யுவராஜ் சிங் 24, சுமன் 23, மாத்யூஸ் 19, மார்ஷ் 38 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி சார்பில் ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல். போட்டி: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி
» சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி: கொல்கத்தா 48 ரன் வித்தியாசத்தல வெற்றி
» இன்றைய போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கெய்லின் அதிரடி தொடருமா?
» மும்பைக்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum