ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்: வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்- பிளமிங்
Page 1 of 1

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5-வது ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே 7 ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளன.
சென்னை, ஐதராபாத் அணிகள் 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன. இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களது ஆட்டம் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த போட்டியில் அபாரமாக இருந்தது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக 185 ரன் இலக்கை எடுத்து வென்றோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் வென்று புள்ளிகள் அதிகரிப்பதே முக்கியமானதாகும். கடந்த ஐ.பி.எல். தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக முரளிவிஜய் நீக்கப்பட்டார். தற்போதும் அவரது ஆட்டம் இயல்பான நிலைக்கு வரவில்லை.
தொடக்க வீரருக்குத்தான் அவர் பொருத்தமானவர். அவர் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னை அணியின் பந்துவீச்சில் அஸ்வின் நிலையாக உள்ளார். ரன்களை அதிகம் கொடுக்காமல் நேர்த்தியுடன் வீசுகிறார். அவரை மிடில் ஓவரில் பயன்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். வேகப்பந்து வீரர்கள் முழு திறமையை பயன்படுத்தவில்லை. இதனால் அவர்கள் இன்றும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு பிளமிங் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னை சூப்பர்கிங்சின் ஆதிக்கம் தொடருமா?: ஐதராபாத் அணியுடன் நாளை மோதல்
» பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்: கொல்கத்தா பதிலடி கொடுக்குமா?
» புனே அணியுடன் இன்று மோதல்: டோனி சிறந்த மேட்ச்வின்னர்- ரெய்னா
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» எல்லா போட்டியிலும் முன்னணி வீரர்கள் சிறப்பாக ஆடமுடியாது: கோலி கருத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum