தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?

Go down

கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா? Empty கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?

Post  ishwarya Sat May 04, 2013 12:31 pm

ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. பஞ்சாப், பெங்களூர், டெல்லி அணிகளை வென்று இருந்தது. மும்பை, புனே அணிகளிடம் தோற்று இருந்தது. டெல்லி அணிக்கு எதிராக சென்னை வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதே வேகத்தில் விளையாடி சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த சென்னை அணி போராட வேண்டும். டெல்லி அணிக்கு எதிராக சிறப்பான முத்திரையை பதித்ததால் இன்றைய ஆட்டத்துக்கான அணியில் மாற்றம் இருக்காது. கொல்கத்தா அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ளது. அந்த அணி டெல்லி, ஐதராபாத் அணிகளை வென்றது.

பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளிடம் தோற்று இருந்தது. 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும். ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சேப்பாக்கத்தில் நாளை புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
» டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் நாளை மோதல்
» புனே வாரியர்சுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா?
» பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்: கொல்கத்தா பதிலடி கொடுக்குமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum