எல்லா போட்டியிலும் முன்னணி வீரர்கள் சிறப்பாக ஆடமுடியாது: கோலி கருத்து
Page 1 of 1

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியின் தொடர் வெற்றிக்கு மும்பை இந்தியன்ஸ் முற்றுப்புள்ளி வைத்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்தது. தொடக்க வீரர் சுமித் 36 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்னும், தினேஷ் கார்த்திக் 33 பந்தில் 43 ரன்னும், போலார்ட் 16 பந்தில் 34 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சரண்டர் ஆனது. அந்த அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 58 ரன்னில் அபார வெற்றி பெற்றது. வினய்குமார் அதிகபட்சமாக 26 ரன் எடுத்தார். குல்கர்னி 3 விக்கெட்டும், ஹர்பஜன், சுமித் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். நேற்றைய ஆட்டத்தில் மும்பை ரசிகர்களின் ஆதரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெருமளவில் இருந்தது.
பெங்களூர் அணி விக்கெட்டுகளை கைப்பற்றியபோதும், ரன் எடுத்த போதும் ரசிகர்கள் எந்தவித ஆரவாரமும் தெரிவிக்கவில்லை. இதனால் பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி வருத்தம் அடைந்தார். பரிசளிப்பு விழாவின் போது அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
பெங்களூர் மைதானத்தில் ஒவ்வொரு அணி கேப்டன், இந்திய வீரர்களை ரசிகர்கள் உற்சாகம் மூட்டுவார்கள். ஆனால் இங்கு அப்படி அல்ல. ஐ.பி.எல். போட்டியோடு உலகம் முடிந்து விடவில்லை. நான் இந்திய அணிக்காகவும் விளையாடுவேன் என்பதை ரசிகர்கள் மறந்துவிட்டார்கள்.
மும்பை அணி எங்களை எல்லா வழியிலும் அவுட் செய்துவிட்டது. முன்னணி பேட்ஸ்மேன்கள் 4 பேரும் (கெய்ல், தில்சான், கோலி, டிவில்லியர்ஸ்) ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிரடியாக விளையாட முடியாது. இனிவரும் ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவோம்.
இவ்வாறு வீராட் கோலி கூறியுள்ளார்.
வெற்றிகுறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, எங்களது, பேட்டிங், பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. குறிப்பாக குல்கர்னி அபாரமாக பந்துவீசினார் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூப்பர் ஓவரில் ராம்பால் சிறப்பாக வீசினார்: வீராட் கோலி பாராட்டு
» ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்: வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்- பிளமிங்
» அடுத்த போட்டியிலும் கிளார்க் பங்கேற்கமாட்டார்
» இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி: சன்டிமல் 92 ஓட்டங்கள்
» 2வது இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வசமே துடுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum