புனே அணியுடன் இன்று மோதல்: டோனி சிறந்த மேட்ச்வின்னர்- ரெய்னா
Page 1 of 1

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பையும், 3-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியையும் தோற்கடித்தது.
தற்போது புனே அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. புனே வாரியர்ஸ் அணி 4 ஆட்டத்தில் ஒரு வெற்றி 3 தோல்வியுடன் உள்ளது. அந்த அணி கேப்டன் மேத்யூஸ் சென்னை போட்டியில் ஆட முடியாது. இதனால் உத்தப்பா, ரோஸ் டெய்லர், ஸ்டீவ்சுமித் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம். யுவராஜ் சிங்குக்கு கேப்டன் சுமையை கொடுக்க விரும்பவில்லை என்று பயிற்சியாளர் டொனால்டு கூறி இருந்தார். கேப்டனாக இருக்க வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனியை சிறந்த மேட்ச் வின்னர் என்று சக வீரர் ரெய்னா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆட்டத்தை முடித்து வைப்பதில் டோனியே சிறந்தவர். அவருடன் விளையாடி வருவதை வைத்து இதை சொல்கிறேன். ஒருநாள் போட்டியிலும் அவரது சராசரி 50-க்கும் மேல் இருக்கிறது. அவரது ஆட்டம் நம்பமுடியாத அளவில் பிரமிப்பாக இருக்கிறது. 6-வது அல்லது 7-வது வீரராக அவர் களம் வந்து சிறந்த மேட்ச் வின்னராக செயல்படுகிறார்.
பெங்களூர் அணிக்கு எதிராக கடைசி பந்தில் பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானது. பரபரப்பான இந்த வெற்றியால் நாங்கள் அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்க வில்லை. டோனியை போன்று ரவிந்திர ஜடேஜாவும் மேட்ச் வின்னராக திகழ்ந்து வருகிறார். சென்னை அணியில் உள்ளூர் வீரர்களும், வெளிநாட்டு வீரர்களும் நல்ல நிலையில் இருப்பதால் அணி சிறப்பாக உள்ளது.
இவ்வாறு ரெய்னா கூறி யுள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜடேஜா சிறந்த மேட்ச்வின்னர்: டோனி, பிளமிங் பாராட்டு
» சேப்பாக்கத்தில் நாளை புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
» பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்: கொல்கத்தா பதிலடி கொடுக்குமா?
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்: வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்- பிளமிங்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum