சென்னை சூப்பர்கிங்சின் ஆதிக்கம் தொடருமா?: ஐதராபாத் அணியுடன் நாளை மோதல்
Page 1 of 1

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். போட்டியின் 34-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே 7 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன.
ஐதராபாத்தை விட சென்னை அணி ரன் ரேட்டில் முன்னிலை வகிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர் டெவலிஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை வென்று இருந்தது. மும்பை இந்தியன்ஸ், புனே வாரியாஸ் அணிகளிடம் தோற்று இருந்தது.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. தொடர் வெற்றியை பெற்ற சென்னை அணி தொடர் வெற்றிக்காக காத்திருக்கிறது. இந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 4 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் இரண்டில் வென்றது. இரண்டில் தோற்றது. பெங்களூர், ராஜஸ்தான் அணிகளை வென்று இருந்தது. மும்பை, புனே அணிகளிடம் தோற்று இருந்தது.
சென்னை அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. குறிப்பாக மைக் ஹஸ்சி, பிராவோ நல்ல நிலையில் உள்ளனர். டுபெலிசிஸ் இடம் பெற்றால் ஜேசன்ஹோல்டர் நீக்கப்படுவார். புதுமுக வீரரான ஹோல்டர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார். ரெய்னா நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலமே.
கேப்டன் டோனி, ஜடேஜா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அணியில் உள்ளனர். முரளி விஜய் இனிவரும் ஆட்டத்திலாவது தன் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சிறப்பாக விளையாடி வருவதால் சென்னை சூப்பர் கிங்ஸ்சிற்கு சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரூன் இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக செயல்படுவார். காயம் அடைந்த ஷிகார் தவான் அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமே. நாளைய ஆட்டத்தில் அவர் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் ஸ்டெய்ன், அமித் மிஸ்ரா தொடர்ந்து பந்துவீச்சில் முத்திரை பதித்து வருகிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதிக்கம் நீடிக்குமா?-பஞ்சாப்புடன் நாளை மோதல்
» சேப்பாக்கத்தில் நாளை புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
» ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்: வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்- பிளமிங்
» சென்னை-கொல்கத்தா இன்று மோதல்: டோனியின் அதிரடி தொடருமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum