பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்: கொல்கத்தா பதிலடி கொடுக்குமா?
Page 1 of 1

ஐ.பி.எல். போட்டியின் 35-வது `லீக்' ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- கில் கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் நிலை பரிதாபமாக உள்ளது. அந்த அணி 7 ஆட்டத்தில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.
டெல்லி, ஐதராபாத் அணிகளை வென்று இருந்தது. ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப், சென்னை, மும்பை அணிகளிடம் தோற்று இருந்தது. தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்த அந்த அணி 4-வது தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடும். கொல்கத்தா அணி 4 ரன்னில் பஞ்சாப்பிடம் தோற்று இருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி வீரர்கள் இருந்தும் அந்த அணி மோசமான நிலையில் இருப்பது ஆச்சரியமே. வெளிநாட்டு வீரர்களில் மேக்குல்லமுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய ஆட்டத்திலாவது கேப்டன் காம்பீர் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. புனே( 2முறை), கொல்கத்தா, டெல்லி அணிகளை வென்று இருந்தது. சென்னை, ராஜஸ் தான், ஐதராபாத் அணிகளிடம் தோற்று இருந்தது. தொடர்ந்து 2 வெற்றியை ருசித்த பஞ்சாப் அணி `ஹாட்ரிக்' வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புனே வாரியர்சுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா?
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» புனே அணியுடன் இன்று மோதல்: டோனி சிறந்த மேட்ச்வின்னர்- ரெய்னா
» ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்: வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்- பிளமிங்
» சென்னை-கொல்கத்தா இன்று மோதல்: டோனியின் அதிரடி தொடருமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum