சென்னை-கொல்கத்தா இன்று மோதல்: டோனியின் அதிரடி தொடருமா?
Page 1 of 1

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி 8 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றியை ருசித்தது. தொடர் வெற்றிக்காக போராடும். சேப்பாக்கத்தில் இந்த தொடரில் சென்னை அணி 5 ஆட்டத்தில் விளையாடி விட்டது. இதில் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 ஆட்டத்தில் தோற்றது.
கொல்கத்தா அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி சென்னை அணிக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் தோற்றதற்கு அந்த அணி பழிவாங்கும் ஆர்வத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி இந்த ஐ.பி.எல். தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக அவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கடந்த 25-ந்தேதி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக அவர் ஆடிய அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீரரான ஸ்டெயின் பந்தில் அவர் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அவரது பந்தில் மட்டும் 3 சிக்சர் அடித்தார். 4-வது வீரராக களம் இறங்கிய அவர் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார்.
இதேபோல பெங்களூர், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும், டெல்லி அணிக்கு எதிராகவும் முக்கிய பங்கு வகித்தார். மும்பை அணிக்கு எதிராகவும் அவர் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் ஆட்டம் இழந்ததால் தோல்வி ஏற்பட்டது. புனே, கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் தான் அவரது செயல்பாடு சரியில்லாமல் போனது. டோனி 8 ஆட்டத்தில் 7 போட்டியில் தான் ஆடினார். இதில் ஒரு முறை அவுட் இல்லை. 235 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 39.16 ஆகும். 2 அரை சதம் அடித்துள்ளார். மொத்தம் 19 பவுண்டரியும், 10 சிக்சரும் அடித்துள்ளார்.
டோனியின் இந்த அதிரடி ஆட்டம் கொல்கத்தா அணிக்கு எதிராகவும் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» சென்னை சூப்பர்கிங்சின் ஆதிக்கம் தொடருமா?: ஐதராபாத் அணியுடன் நாளை மோதல்
» பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்: கொல்கத்தா பதிலடி கொடுக்குமா?
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்
» டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum