புனே வாரியர்சுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா?
Page 1 of 1

6-வது ஐ.பி.எல். போட்டியில் 42-வது “லீக்” ஆட்டம் புனேயில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி, புனே வாரியர்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஆட்டத்தில் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் சென்னை அணி உள்ளது. தொடர்ந்து 5 ஆட்டத்தில் வென்ற சூப்பர் கிங்ஸ் மேலும் வெற்றியை தொடர கடுமையாக போராடும்.
சென்னை அணியின் பேட்டிங்கில் கேப்டன் டோனி, மைக்ஹஸ்சி, ரெய்னா, ஜடேஜா நல்ல நிலையில் உள்ளனர். அல்பி மார்கல் உடல் தகுதி பெற்றால் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார். நானஸ் நீக்கப்படுவார். முரளிவிஜய் இடத்தில் விர்த்திமான் சகா சிறப்பாக ஆடினார். இதனால் அவர் தொடர்ந்து வாய்ப்பில் இருப்பார்.
புனே வாரியர்ஸ் அணியின் நிலை பரிதாபமாக உள்ளது. அந்த அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இனி வரும் ஆட்டங்களில் வென்றால் தான் “பிளேஆப்” வாய்ப்பில் இருக்க முடியும் என்ற கட்டாயம் புனே வாரியர்சுக்கு உள்ளது. இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடும்.
வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் வெவ்வேறு வீரர்களை தேர்வு செய்கிறது.
வழக்கமான கேப்டன் மேத்யூஸ், ரோஸ் டெய்லர், அஜந்தா மெண்டீஸ் ஆகியோர் தொடர்ந்து ஒரங்கட்டப்பட்டனர். ஆரோன்பிஞ்ச் தலைமையிலான அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேப்பாக்கத்தில் நாளை புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்: கொல்கத்தா பதிலடி கொடுக்குமா?
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் நாளை மோதல்
» டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum