சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா நாளை பலப்பரீட்சை
Page 1 of 1

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறது. சென்னை அணி 8 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லி டேர்டெ வில்சை 86 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட்டிலும், ராஜஸ்தானை 5 விக்கெட்டிலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 விக்கெட்டிலும் வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 9 ரன்னிலும், புனே வாரியர்ஸ் 24 ரன்னிலும் தோற்றது.
சென்னை அணி 9-வது “லீக்” ஆட்டத்தில் கொல்கத்தா அணியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சந்திக்கிறது. சென்னை அணி தொடர்ந்து 4 ஆட்டங்களில் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாளைய ஆட்டத்திலும் வென்று வெற்றியை தொடர விரும்புகிறது. ஒட்டுமொத்தமாக 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
சென்னை அணியின் இந்த சிறப்பான ஆதிக்கத்துக்கு கேப்டன் டோனியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்து உள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான அவர் ஆடிய அதிரடி ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. டோனியின் இதே அதிரடி நிலை தொடர்ந்தால் சென்னை அணியை கட்டுப்படுத்துவது கடினமே.
மேலும் தொடக்க வீரரான மைக்ஹஸ்சியும் நல்ல நிலையில் உள்ளார். ரெய்னா, ஜடேஜா, பிராவோ போன்ற சிறந்த அதிரடி வீரர்களும் சென்னை அணிக்கு பலம் சேர்த்து வருகிறார்கள். அல்பி மார்கல் உடல் தகுதி பெற்றால் நாளைய போட்டியில் ஆடலாம். ஜேகன் ஹோல்டர் இடத்தில் அவர் இடம் பெறலாம்.
நானஸ் சேர்க்கப்பட்டால் கிறிஸ்மாரிஸ் கழற்றிவிடப்படலாம். டுபெலிசுக்கு இன்னும் கேப்டன் டோனி வாய்ப்பு வழங்கவில்லை. கொல்கத்தா அணி இந்த ஐ.பி.எல். தொடரில் சென்னையிடம் ஏற்கனவே தோற்று இருந்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது.
பஞ்சாப் அணியை நேற்று வீழ்த்தி இருந்ததால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. யூசுப்பதான் மோசமாக விளையாடி வருவது அந்த அணிக்கு பாதிப்பாக உள்ளது. அவர் அதிரடியாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார். மார்கன், காலிஸ், சுனில் நரீன், பிஸ்லா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
சென்னை அணியை பழி தீர்க்கும் வகையில் கொல்கத்தா விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் சோனி செட் மேக்சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி டேர்டெ வில்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. ராய்ப்பூரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-பெங்களூர் நாளை பலப்பரீட்சை
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதிக்கம் நீடிக்குமா?-பஞ்சாப்புடன் நாளை மோதல்
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்
» சென்னை-கொல்கத்தா இன்று மோதல்: டோனியின் அதிரடி தொடருமா?
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum