சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதிக்கம் நீடிக்குமா?-பஞ்சாப்புடன் நாளை மோதல்
Page 1 of 1

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை பஞ்சாப்புடன் மோதுகிறது.
6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணியை 2 முறையும், பஞ்சாப், பெங்களூர், டெல்லி, ராஜஸ்தான், ஐதராபாத், புனே அணிகளை தலா ஒரு முறையும் வீழ்த்தியுள்ளது. மும்பை, புனேயிடம் தலா ஒரு ஆட்டத்தில் மட்டும் தோற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது “லீக்” போட்டியில் பஞ்சாப் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
பஞ்சாப் அணியை அதன் சொந்த மண்ணான மொகாலியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி வெற்றியுடன் திரும்பியது.
இதற்கு நாளைய போட்டியில் பதிலடி கொடுக்க பஞ்சாப் அணி தயாராகி வருகிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாளைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று “பிளேஆப்” சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, மைக் ஹஸ்சி போன்றோரின் பலமான பேட்டிங்கை கொண்டுள்ளது. கேப்டன் டோனி அணியின் “மேட்ச் வின்னராக” ஜொலித்து வருகிறார்.
பஞ்சாப் அணியில் டேவிட்ஹஸ்சி, மில்லர், அசார் மெகமூத் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி சென்னை வீரர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உருவாகி வருகிறது. இதனால் நாளைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் நாளை மோதல்
» சேப்பாக்கத்தில் நாளை புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா நாளை பலப்பரீட்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum