தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி: சன்டிமல் 92 ஓட்டங்கள்

Go down

இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி: சன்டிமல் 92 ஓட்டங்கள் Empty இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி: சன்டிமல் 92 ஓட்டங்கள்

Post  meenu Mon Mar 18, 2013 12:39 pm


0

சிறிலங்கா தென்னாப்பிரிக்கா அணிகளுக்ககிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறிலங்கா அணியை 5 இலக்குகளால் வெற்றிகண்டுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இன்றைய ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி சிறிலங்க அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி நிர்னயிக்கப்பட்ட ஐம்பது பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.

சிறிலங்கா ஆரம்பத்தில் தடுமாற்றத்துடன் தனது ஆட்டத்தை தொடங்கினாலும் சன்டிமல் மற்றும் தரங்கவின் ஆட்டத்தால் ஒருவாறு சமாளித்து பந்துப்பரிமாற்ற நிறைவில் ஆறு இலக்குகளை இழந்து 236 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு 237 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னனாப்பிரிக்கா 48.4 பந்துப்பரிமாற்றத்தில் ஐந்து இலக்குகளை இழந்து தனது வெற்றி இலக்கை எட்டி சிறிலங்காவை ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

சிறிலங்கா அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய சன்டிமல் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களையும் தரங்க 66 ஓட்டங்களையும் பெற்றனர். தென்னாப்பிரிக்கா சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கலிஸ் 37 ஓட்டங்கயே பெற்றிருந்த வேளை தம்மிக்க பபிரசாத்தின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அம்லா சிறப்பாக ஆடி 58 ஓட்டங்களையும் டுமினி 66 ஓட்டங்களையும் பெற்றனர்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அவுஸ்திரேலியா 16 ஓட்டங்களால் வெற்றி: உபுல் தரங்க 71 ஓட்டங்கள்
» இந்திய அணி மேலதிக புள்ளியுடன் அபார வெற்றி: விராத் கோலி 133 ஓட்டங்கள்
» இரண்டாவது ரெஸ்டை வெல்ல இலங்கைக்கு 363 வெற்றி இலக்கு!
» இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள்: திலகரத்ன தில்ஷான் 160 ஓட்டங்கள் அதிரடி
» இலங்கை இந்தியாவுக்கு 290 ஓட்டங்கள் இலக்கு: திரிமான்ன 62 ஓட்டங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum