சூப்பர் ஓவரில் ராம்பால் சிறப்பாக வீசினார்: வீராட் கோலி பாராட்டு
Page 1 of 1

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 21-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய பெங்களூர் அணியும் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. இதனால் ஆட்டம் “டை” ஆனது. வீராட் கோலி 50 பந்தில் 65 ரன்னும் (7பவுண்டரி, ஒரு சிக்சர்), டிவில்லியர்ஸ் 39 ரன்னும் எடுத்தனர்.
ஆட்டம் “டை” ஆனதால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க “சூப்பர் ஓவர்” கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் பெங்களூர் அணி ஆடியது. முதல் 4 பந்தில் 3 ரன்களே எடுக்கப்பட்டது. கடைசி 2 பந்தில் டிவில்லியர்ஸ் அதிரடியாக 2 சிக்சர் விளாசினார். இதனால் 15 ரன் எடுக்கப்பட்டது.
பின்னர் டெல்லி அணி ஆடியது. ராம்பால் வீசிய முதல் பந்திலேயே வார்னர் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பதான் 2-வது பந்தில் பவுண்டரியும், 4-வது பந்தில் சிக்சரும் அடித்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவை. அந்த பந்தில் பென்ரோகர் “போல்டு” ஆனார். இதனால் சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி 4 ரன்னில் வெற்றி பெற்றது.
பெங்களூர் அணி கடந்த 7-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் சூப்பர் ஓவரில் தோற்றது. தற்போது சூப்பர் ஓவரில் வென்று மகிழ்ச்சி அடைந்தது.
இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:-
நானும், டிவில்லியர்சும் களத்தில் இருக்கும் போது ஆட்டம் எங்கள் பக்கம் இருந்தது. 28 பந்தில் 26 ரன் தேவைப்பட்டது. டிவில்லியர்ஸ் ரன்அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து நானும் ஆட்டம் இழந்தேன். கடைசி ஓவரின் 4-வது பந்தில் நாங்கள் ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். ஆனால் சூப்பர் ஓவர் வரை செல்ல வேண்டும் என்பது எங்களது நேரமாகும்.
சூப்பர் ஓவரில் ராம்பால் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு இந்த ஆட்டத்தில் அபாரமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் தோற்று இருந்தால் நான் மிகவும் கோபம் அடைந்து இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி கேப்டன் ஜெயவர்த்தனே கூறும்போது, சூப்பர் ஓவரின் முதல் 4 பந்து சிறப்பாக வீசப்பட்டது. கடைசி 2 பந்தில் தான் மாற்றம் ஏற்பட்டது. இக்கட்டான நேரத்தில் இதை விட சிறப்பாக ஆடுவது அவசியமாகிறது என்றார்.
பெங்களூர் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். அந்த அணி 7-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 20-ந்தேதி சந்திக்கிறது. டெல்லி அணி தொடர்ந்து 5-வது ஆட்டத்தில் தோற்று மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடைசி 6 ஓவரில் ஆட்டத்தை இழந்தோம்: வீராட் கோலி வேதனை
» எல்லா போட்டியிலும் முன்னணி வீரர்கள் சிறப்பாக ஆடமுடியாது: கோலி கருத்து
» சூப்பர் ஓவரில் டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்
» சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள்
» சிறப்பாக வாழ நலமாக வாழ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum