அதே நேரம் அதே இடம் – திரைவிமர்சனம்
Page 1 of 1
அதே நேரம் அதே இடம் – திரைவிமர்சனம்
நடிகர்கள் – ஜெய், விஜயலட்சுமி, ராகுல், ரவி பிரகாஷ், நிழல்கள் ரவி,
இசை – பிரேம்ஜி அமரன்
இயக்கம் – பிரபு எம்.
தயாரிப்பு – ஹரி ராமகிருஷ்ணன்
காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் தவிக்கும் இளைஞனையும், அவனை மறந்துவிட்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட பெண்ணையும் பற்றிய கதை.
தாயில்லாமல் தந்தையின் செல்லப் பிள்ளையாக வளரும் ஜெய், நண்பர்களுடன் சேர்ந்து பொழுதைக் கழிக்கிறார். பெண்களை போகப் பொருளாக நினைக்கும் அவர் விஜயலட்சுமியிடம் மட்டும் அன்பைக் காட்டுகிறார்.
ஆரம்பத்தில் மோதலில் ஆரம்பித்து கடைசியில் காதலில் வந்து நிற்கின்றனர். இவர்களது காதல் ஜெய்யின் தந்தைக்கு தெரியவர, “காதல் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நிலைக்க வேண்டுமானால் அதற்கு பணம் முக்கியம்” என்று அவர் அறிவுரை செய்ய, இதனால் ஜெய் வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்கிறார்.
பணத்தை சம்பாதித்துக்கொண்டு திரும்பியதும் காதலி இன்னொருவனுக்கு மனைவியானது தெரிந்து அதிர்ந்து போகிறார் ஜெய். அவளை சந்திக்கும்போது அவள் சொல்லும் காரணம் அவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவளை மறக்க முடியாமலும், வேறு வாழ்க்கையை நினைக்க முடியாமலும் அல்லாடுகிறார். பிறகு ஏற்படும் திருப்பங்கள், சம்பவங்கள் என்ன? என்பது மீதி படம்.
வேலைவெட்டி இல்லாத கதாநாயகன், அவனுக்கு மூன்று நண்பர்கள், தெருமுனையில் உள்ள குட்டிச்சுவரில் சந்திப்பு, காதல், ஆட்டம், பாட்டம் என்று படத்தின் முதல் பாதி, ஏற்கனவே பல படங்களில் பார்த்து சலித்த காட்சிகள்.
ஜெய்க்கு அதிக வேலையில்லை. காதலிக்கும் போதும், பழி வாங்க துடிக்கும் போதும் ஒரேவித பாடிலாங்வேஜ்… ஜெய் கவனம் செலுத்த வேண்டிய இடம் இது. விஜயலட்சுமியை மடியில் போட்டு கதறி அழும்போது ஜனம் சிரிக்கிறது. ஜெய்யை சொல்லி குற்றமில்லை, திரைக்கதை அப்படி.
கரடு முரடான கதாபாத்திரத்திலும் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார் விஜயலட்சுமி. இடைவேளைக்குப் பிறகு அவரது காதல் பார்வையே கந்தகப் பார்வையாக மாறுவது அட்டகாசம்.
இன்னொரு நாயகன் ராகுல், வெளிநாட்டு சாயலுக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.
விஜயலட்சுமி, ஜெய்யை மறந்து வேறு ஒருவரை மணப்பதற்கு சம்மதம் தெரிவிப்பது, கதையில் பெரிய திருப்பம். ஆஸ்திரேலியாவில் இருந்து ஜெய் திரும்புவது, காதலியின் கணவரை விமானத்திலேயே சந்திப்பது, இருவரும் நண்பர்கள் ஆவது…என படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக செல்கிறது.
காதலிதான் தப்பு செய்தாள்…அவள் கணவர் என்ன பாவம் செய்தார்? என்று சொல்கிற ஜெய், கடைசியில் எடுக்கும் முடிவு பொருந்தவில்லை. அதேபோல், கணவருக்கு தெரியாமல் ஒரே ஒரு நாள் காதலனுடன் வாழ்வதற்கு முன்வரும் விஜயலட்சுமியின் கதாபாத்திரமும் அபத்தமாகி விடுகிறது. படத்தை எப்படி முடிப்பது? என்று தெரியாமல், இயக்குனர் தடுமாறியிருக்கிறார்.
லொள்ளு சபா ஜீவா அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார். அவரும் இல்லாவிட்டால்…? கற்பனையே பயங்கரமாக இருக்கிறது.
அம்மாவை இழந்து காதலியிடம் அன்புக்காக ஏங்கும் இளைஞன், பணவசதிக்காக காதலையே கொச்சைப்படுத்தும் காதலி, பழி வாங்கல் இதெல்லாம் சரிதான். ஆனா, காதலியோட கணவனின் தம்பிக்கும் காதல் தோல்வின்னு காட்டி, அதை ஏதோ உலகளாவிய பிரச்சினையாக கொண்டுபோகிற பில்டப் தேவையா?
பின்னணி இசை வெகு சுமார். பாடல்கள் பரவாயில்லை ரகம். என்ன கொடுமை பிரேம்ஜி இது? பவன் சேகரின் ஒளிப்பதிவும், ஜி.பி.வெங்கடேஷின் படத்தொகுப்பும் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.
மெகா சீரியலையே சுவாரஸியமாக எடுக்கும் இந்தக் காலகட்டத்தில் இப்படியொரு திரைக்கதை. ஒரு பேட்டியில் நான் நடித்த நான்கு படங்களில் மூன்று தேறாது என்றார் ஜெய். அதில் ஒன்றுதான் இந்தப்படம் என்பது பார்வையாளர்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும்?
அதே இட

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேங்கை – திரைவிமர்சனம்
» தம்பிவுடையான் – திரைவிமர்சனம்
» பழசிராஜா – திரைவிமர்சனம்
» பாலைவனச்சோலை – திரைவிமர்சனம்
» மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
» தம்பிவுடையான் – திரைவிமர்சனம்
» பழசிராஜா – திரைவிமர்சனம்
» பாலைவனச்சோலை – திரைவிமர்சனம்
» மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum