தம்பிவுடையான் – திரைவிமர்சனம்
Page 1 of 1
தம்பிவுடையான் – திரைவிமர்சனம்
நடிப்பு – ஆதித்யா அன்பு, மனிஷா சட்டர்ஜி, சாருஹாசன், நிழல்கள் ரவி, காதல் தண்டபாணி,
இசை – ஷ்ரவன்
இயக்கம் – ராஜா மகேஷ்
தயாரிப்பு – மகேஸ்வரி ராஜா
காவிரியில் தண்ணீர் விடும்படி கேட்டு போராடுகிற ஒரு தஞ்சை இளைஞனை பற்றிய கதை.
தம்பிவுடையான், தஞ்சையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். காவிரியில் தண்ணீர் விடாததால், ஊரில் உள்ள விவசாய நிலங்கள் எல்லாம் காய்ந்து போய் கிடக்கிறது. ஏழை விவசாய தொழிலாளர்கள் வறுமையின் கொடுமை தாங்காமல், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
இந்த துயரம் தம்பிவுடையானையும், அவருடைய பாசத்துக்குரிய தாத்தாவையும் பாதிக்கிறது. துயரத்தை தாங்க முடியாமல் தாத்தா தற்கொலை செய்துகொள்கிறார். தாத்தாவின் மரணம் தம்பிவுடையானுக்குள் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காவிரியில் தண்ணீர் விடக்கோரி மாணவர்களையும், விவசாயிகளையும் திரட்டி போராட்டம் நடத்துகிறார் தம்பிவுடையான். இதனால் தம்பிவுடையானுக்கும், உள்ளூர் மந்திரி வேலாயுதத்துக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. தம்பிவுடையானை தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார் மந்திரி வேலாயுதம்.
அவருடைய கொலை முயற்சியில் இருந்து தம்பிவுடையான் தப்பினாரா, அவருடைய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கு பதில், படத்தின் பின்பகுதியில் கிடைக்கிறது.
முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடிப்பிலும், நடனத்திலும் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்யா அன்பு. நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் முன்னுக்கு வரக்கூடியவர்.
தம்பியுடையானின் காதலியாக, சக கல்லூரி மாணவியாக மனிஷா சட்டர்ஜி, பெயரைப் போலவே முகத்திலும் வட இந்திய சாயல் நிறையவே தெரிவதால், தஞ்சை பெண்ணாக மனதில் ஒட்ட மறுக்கிறார்.
சுதந்திர போராட்ட தியாகியான தாத்தா சாருஹாசன், லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரிகளையும், அராஜகம் செய்யும் மந்திரியையும் ரகசியமாக படம்பிடிக்கும் அசோக் பிரபா, கதாநாயகனின் தந்தையாக வரும் ஊராட்சி மன்ற தலைவர் நிழல்கள் ரவி, கதையில் வரும் உயிரோட்டமான கதாபாத்திரங்கள்.
இவர்களைப் போலவே காவிரி பிரச்சினையை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் புரியும்படி தெளிவுப்படுத்தியிருக்கிறார் பேராசிரியராக வரும் வி.சி.குகநாதன்.
காதல் தண்டபாணியை இன்னும் எத்தனை படங்களில் வில்லத்தனமான மந்திரியாக பார்ப்பது? கதாநாயகனின் தாய் மாமன் முத்துக்காளை வரும் காட்சிகளில், கலகலப்பு.
வசனங்களை ஆங்காங்கே கபளீகரம் செய்திருக்கிறது சென்சார். ஆனாலும், தப்பி வந்த வசனங்களில் சாட்டையடி. நீள நீளமான காட்சிகள், வேகத்தை குறைக்கும் பாடல் காட்சிகள் என ஆங்காங்கே சில இடங்களில் படம் அலுப்பு தட்டுகிறது.
மாதவராஜ் தத்தரின் ஒளிப்பதிவும், பொன்மூர்த்தியின் படத்தொகுப்பும் படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன. ஷ்ரவனின் பின்னணி இசையில் நாடகத்தனம். பாடல்களில் அந்த குத்துப்பாட்டை ரசிக்கலாம்.
கதையும், வசனங்களும் எல்லோருக்கும் புரியும்படி பேசி நடிக்கும் கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கும் இயக்குனர் ராஜா மகேஷ், கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இணைந்தால் மக்கள் பிரச்சினைகளை எளிதாக தீர்க்க முடியும் என்ற நல்ல கருத்தினை இந்த படம் மூலம் சொன்னதற்காக பாராட்டலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலைவனச்சோலை – திரைவிமர்சனம்
» வேங்கை – திரைவிமர்சனம்
» மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
» காவலன் – திரைவிமர்சனம்
» மழைக்காலம் – திரைவிமர்சனம்
» வேங்கை – திரைவிமர்சனம்
» மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
» காவலன் – திரைவிமர்சனம்
» மழைக்காலம் – திரைவிமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum