வேங்கை – திரைவிமர்சனம்
Page 1 of 1
வேங்கை – திரைவிமர்சனம்
சிவங்கங்கை பகுதியின் தலைவர் ராஜ்கிரண். மக்களின் நல்லது கெட்டதுகளில் முன்நிற்கிறார். ஊரே அவரை கொண்டாடுகிறது.ராஜ்கிரன் மகன் தனுஷ். நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுகிறார்.
தேர்தலில் பிரகாஷ்ராஜ் ஜெயிக்க ராஜ்கிரண் உதவுகிறார். அவர் எம்.எல்.ஏ. ஆனதும் லஞ்சம் வாங்கி சொத்துக்கள் குவிக்கிறார். அந்த சொத்துக்களை பிடுங்கி மக்களுக்கு தருகிறார் ராஜ்கிரண். இதனால் இருவருக்கும் மோதல்.
தனக்கு ஆபத்துக்கள் சூழ்வதை உணரும் ராஜ்கிரண் தனுசை வேறு ஊருக்கு அனுப்புகிறார். ஆனால் இருவரையும் தீர்த்துக்கட்ட பிரகாஷ்ராஜ் ரவுடிகளை ஏவுகிறார். தனுஷ் தப்புவதோடு தந்தை உயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து போராடுகிறார். அவர் ஜெயித்தாரா? என்பது கிளை மாக்ஸ்.
அப்பா மேல் பயம் கலந்த, பாசம் கொண்ட துறு துறு இளைஞனாக தனுஷ் பளிச்சிடுகிறார்.
ரெயில் தண்டவாளத்தில் குண்டு வைத்தவர்களை காட்டுக்குள் துரத்தி அடித்து கட்டிப் போடும் ஆரம்பமே ஆரவாரம்.பிரகாஷ்ராஜ் எதிர்ப்புகளை பதுங்கி பாய்ந்து முறியடிப்பது ஜோர்.
ரவுடி தந்தையை உதறும் படி நிர்ப்பந்திக்கும் காதலி தமன்னாவிடம் ஆவேசமாகவதும், தந்தைக்கு விஷம் வைத்தது அறிந்து உடைவதும் முத்திரை பதிவுகள்.
தனுசை ஆரம்பத்தில் வெறுக்கும் தமன்னா அவரது நல்ல நடத்தைகளில் ஈர்ப்பாகி காதல் வயப்படுவது கவித்துவம். அவரது கொலைகாரத்தனம் திடுக்கிட வைக்கிறது.
ராஜ்கிரண் கேரக்டரில் உரம் ஏற்றுகிறார். ஆபத்தில் சிக்கிய மகனை காப்பாற்ற வெகுண்டெழுந்து விரைவதில் பாசத்தின் அழுத்தம். அசைவத்தை வெறுக்கும் தமன்னாவுக்கு சைவ விருந்து வைப்பதில் மென்மை குணம் காட்டுகிறார்.
பிரகாஷ் ராஜ் வில்லத்தனத்தில் விசுவரூபம். தேவி ஸ்ரீபரசாத் பின்னணி இசை பலம். ஆக்ஷன் கதையை குடும்ப சென்டிமென்ட். காதல் பின்னணியில் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஹரி.
வெட்டு, குத்து, என கதையில் ரத்த வாடை. குவியல் குவியலாய் ஆட்களை கொன்று விட்டு போலீஸ் தண்டனையில் இருந்து தனுஷ் தப்புவதில் லாஜிக் இல்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வீரசேகரன் – திரைவிமர்சனம்
» வேகமிழந்த வேங்கை
» பழசிராஜா – திரைவிமர்சனம்
» வேங்கை – திரை விமர்சனம்
» ராவணன் – திரைவிமர்சனம்
» வேகமிழந்த வேங்கை
» பழசிராஜா – திரைவிமர்சனம்
» வேங்கை – திரை விமர்சனம்
» ராவணன் – திரைவிமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum