தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலைவனச்சோலை – திரைவிமர்சனம்

Go down

பாலைவனச்சோலை – திரைவிமர்சனம் Empty பாலைவனச்சோலை – திரைவிமர்சனம்

Post  ishwarya Sat Apr 27, 2013 4:31 pm

நடிப்பு – நிதின் சத்யா, சஞ்சீவ், சாம்ஸ், அபிநய், சத்யன், கார்த்திகா, வெ.ஆ.மூர்த்தி.
இசை – இ.கே.பாபி
இயக்கம் – எஸ்.தயாளன்
தயாரிப்பு – ஆர்.ராதாகிருஷ்ணன்

25 வருடங்களுக்கு முன்பு வெளியான “பாலைவனச்சோலை” படமே மீண்டும் அதேபெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தெருமுனை மதில்சுவரில் அமர்ந்து அரட்டையடிக்கும் நண்பர்களாக நிதின் சத்யா, சஞ்சீவ், சாம்ஸ், அபிநய், சத்யன் ஆகியோர். அங்குள்ள வீட்டில் குடியேறுகிறார் மதுரையிலிருந்து வரும் கார்த்திகா.

கார்த்திகாவை காதலிக்க போட்டி போடுகின்றனர் ஐந்து பேரும். கார்த்திகாவோ ஐந்து பேரிடமும் நட்பாக பழகுகிறார். தங்களின் தொழில் விஷயத்தில் ஐந்து பேரும் மனம் உடையும்போது ஆறுதல் சொல்கிறார்.

ஒரு சமயத்தில் நிதின் சத்யாவுக்கும், கார்த்திகாவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால் நிதின் சத்யாவை கல்யாணம் செய்ய முடியாதளவுக்கு கார்த்திகாவை இதயநோய் ஆட்கொள்ளுகிறது. இதை யாரிடமும் சொல்லாமல் மறைக்கும் கார்த்திகா, தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சஞ்சீவின் தங்கையின் திருமணம் பணம் இல்லாமல் தடைபடுகிறது. அதைக் கண்டு வருந்தும் கார்த்திகா தனது காதலை தியாகம் செய்து நிதின் சத்யாவை சஞ்சீவ் தங்கைக்கு கட்டி வைக்கிறார். எல்லோருக்கும் நல்லவரான கார்த்திகாவின் முடிவு என்ன என்பதை இறுதிக்காட்சி சொல்லுகிறது.

கண்களில் சோகமும், கவனத்தை சிதறடிக்கும் அழகுமாக வந்து நிற்கும் கார்த்திகாவின் கடைசி நிமிடங்கள் கண்கலங்க வைத்திருப்பது நிஜம். காதலை வெளிப்படுத்தும் ஒவ்வொருவரிடமும் மனம்நோகாமல் நாகரீகமாக நடந்து கொள்ளும் கார்த்திகா நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

ஐந்து பேருக்கும் சரிசமமான வாய்ப்பு என்றாலும், நிதின் சத்யாவுக்கும் மட்டும் கொஞ்சம் அதிகம். அதை தவறவிடாமல் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் நிதின் சத்யா. அரவாணி வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் இயக்குனர் தயாளனை பாராட்டியே ஆகவேண்டும்.

நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சினிமா கம்பெனிகளின் படிகளில் ஏறி இறங்கும் சத்யன் காமெடி செய்கிறார். தங்கையின் திருமணத்துக்காக கேட்ட இடத்தில் பணம் கிடைக்காதபோது மனம் வருந்தும் சஞ்சீவ், அந்த பதற்றத்தை முகத்தில் வெளிக்காட்டாமல் நடிப்பை தொலைத்திருக்கிறார்.

படத்தில் நிறைய இடங்களில் சென்டிமென்ட் தேக்கம். பழைய பாலைவனச்சோலையில் இருந்த யதார்த்தம் இதில் இல்லாதது பெரிய குறை. அதேமாதிரி ஒவ்வொரு காட்சியிலும் நண்பர்களை காட்ட வேண்டும் என்பதற்காக குடும்ப படம் எடுத்ததுபோல் கூட்டம் கூட்டமாக நெரிசலை காட்டுவது நாடகத்தனம்.

வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் ஜூனியராக வேலை செய்யும் சாம்ஸ், வழக்காட தனக்கு ஒரு வாய்ப்பு தர மறுக்கும் மூர்த்தியை கடிந்துகொள்வது நகைச்சுவை. வழக்கம்போல இரட்டை அர்த்த வசனத்தை அவிழ்த்துவிடும் மூர்த்தியின் வசனம் முகம் சுழிக்க வைக்கிறது.

மருத்துவமனையில் உயிருக்கு போராடும் கார்த்திகாவை காப்பாற்ற தந்தை கே.ராஜனிடம் பணம் கேட்கிறார் அபிநய். தரமுடியாது என்று அவர் சொன்னதும் பீரோவிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓடுவது விறுவிறு.

மூர்த்தியின் ஒளிப்பதிவு பளிச்சென்று படத்திற்கு அழகூட்டுகிறது. “மேகமே மேகமே” பாடலுக்கு முன்பாக வரும் அந்த ஹம்மிங்கும், பாடலும் தாலாட்டுகிறது.

புதுசா சொல்லும்படியாக எதுவும் இல்லை இந்த பாலைவனச்சோலையில்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum