மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
Page 1 of 1
மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
நடிப்பு: தனுஷ், ஹன்ஸிகா மோத்வானி, மனீஷா கொய்ராலா, விவேக்
இசை: மணி சர்மா
இயக்கம்: சுராஜ்
வெளியீடு:சன் பிக்சர்ஸ்
விருது, கலைப் படைப்பு என்பதையெல்லாம் தாண்டி ரஜினியின் படங்களுக்கென்று ஒரு உத்தரவாதம் உண்டு. அது அதிகபட்ச பொழுதுபோக்கு. அவர் என்ன செய்தாலும் அதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவார்கள். எந்த வசனம் பேசினாலும் ரசிபபார்கள். இதையே வேறு நடிகர்கள் காப்பியடிக்கும் போது, மகா கடுப்பாகி விடுவார்கள்.
ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ரீமேக் என்று கூறிக் கொண்டு வந்திருக்கும் தனுஷின் மாப்பிள்ளை அப்படி ஒரு கடுப்பேத்தும் படம் தான்!
ரஜினியின் பழைய படம் மாப்பிள்ளை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா… அப்படியெனில் உங்களுக்கு படத்தின் கதை தேவையில்லை. தங்கையை காதலித்து கர்ப்பமாக்கிய கோடீஸ்வரியின் மகனை தன் தங்கைக்கே மணமுடித்து, கூடவே அந்த கோடீஸ்வரி மகளைக் காதலித்து கல்யாணம் பண்ணி, அந்த கோடீஸ்வரியின் திமிரை அடக்கும் அதே ஆறுமுகத்தின் கதைதான் இந்தப் படமும் (மூச்சு முட்டுது).
ஆனால் அந்தப் படத்தின் அழகு என்ன, ஆவேசம் என்ன, அதிகபட்ச பொழுதுபோக்கு என்ன… இந்தப் படம் அதில் 100ல் அரை சதவீதம் கூட இல்லை.
தனுஷ்தான் மாப்பிள்ளை. கொஞ்சம் கூட சகிக்க முடியாத மாப்பிள்ளை. “நீங்க ஆயிரம் மாப்பிள்ளையை விலைக்கு வாங்கலாம்… ஆனால் என்னைப் போல ஒரு ஆம்பிளையை விலைக்கு வாங்க முடியாது” என்று அவர் பஞ்ச் டயலாக் பேசும்போது மகா கேவலமாக உள்ளது.!
ஏதோ மெழுகுப் பொம்மை மாதிரி ஒரு ஹீரோயின் (ஹன்ஸிகா). கீ கொடுத்த மாதிரி வந்து போகிறார். வசனம் பேசவோ, அதற்கேற்ற மாதிரி உடலில் அசைவுகள் காட்டவோ தெரியாத ஒரு பணக்கார கத்துக்குட்டி மாதிரி இருக்கிறார்.
இவர்களையெல்லாம் விட மகா கொடுமை, மாமியாராக வரும் மனீஷா கொய்ராலா. உண்மையில் இவர்தான் இந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்த போது, தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் சுயநினைவுடன் இருந்தார்களா என்றே தெரியவில்லை. சில காட்சிகளில் மூன்றாம் தர மலையாளப் படங்களின் நாயகி ரேஞ்சுக்கு அவரைக் காட்டியிருக்கிறார்கள்.
வீணடிக்கப்பட்ட முக்கிய நடிகர்களில் ஒருவர் ஆசிஷ் வித்யார்த்தி. விவேக் ரிடையர்மென்டை நெருங்கிவிட்டார் என்பது தெரிகிறது.
பாடல்கள், இசை, ஒளிப்பதிவு என எல்லாமே பக்கா சொதப்பலாய் அமைந்த படம் என்றால் இந்த ஆண்டில் அநேகமாக அது மாப்பிள்ளையாகத்தான் இருக்கும்!
ரஜினியின் பழைய மாப்பிள்ளை எவ்வளவு ‘நல்ல’ படம் என்று உணர்த்தியதற்காக வேண்டுமானால் இயக்குநர் சுராஜூக்கு நன்றி சொல்லலாம்!!
மாப்பிள்ளை- உங்கள் அரிய நேரத்தை மிச்சப்படுத்துங்கள்!!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மழைக்காலம் – திரைவிமர்சனம்
» இளைஞன் – திரைவிமர்சனம்
» சிறுத்தை – திரைவிமர்சனம்
» தொட்டுப்பார் – திரைவிமர்சனம்
» ராவணன் – திரைவிமர்சனம்
» இளைஞன் – திரைவிமர்சனம்
» சிறுத்தை – திரைவிமர்சனம்
» தொட்டுப்பார் – திரைவிமர்சனம்
» ராவணன் – திரைவிமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum