பழசிராஜா – திரைவிமர்சனம்
Page 1 of 1
பழசிராஜா – திரைவிமர்சனம்
நடிகர்கள் – மம்முட்டி, சரத்குமார், பத்மப்பிரியா, கனிகா, சுமன், மனோஜ் கே.ஜெயன்.
இசை – இளையராஜா
இயக்கம் – ஹரிஹரன்
தயாரிப்பு – கோகுலம் கோபாலன்
கேரளாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய முதல் மலபார் மன்னன் பழசிராஜா. அவரைப் பற்றிய வரலாற்றுப் படம்தான் இது.
கேரளாவுக்கு மிளகு, ஏலக்காய் வியாபாரம் செய்ய வரும் ஆங்கிலேயர்கள், மெல்ல மெல்ல அங்குள்ள குறுநில மன்னர்களை தங்களது பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் பகைமூட்டி, தங்களது, நவீன ஆயுதம் தாங்கிய படை, கூலிப்படை இவற்றைக் கொண்டு நாடு பிடிக்கத் தொடங்குகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய மறுத்து எதிர்த்து நிற்கிறார் பழசிராஜா.
இதனால் கோபமுறும் ஆங்கிலேயர்கள் சில புல்லுருவிகளின் துணையுடன் பழசிராஜா இல்லாத வேளையில் அவரது அரண்மனையை கொள்ளையடிக்கிறார்கள். அரண்மனை ஆங்கிலேயன் வசமாகிறது.
பழசிராஜா தனது விசுவாசமிக்க தளபதி எடச்சன் குங்கனுடன் தலைமறைவாகிறார். மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர் படை பின்வாங்கும் நிலை. ஒரு கட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம் போட்டு போரை நிறுத்துகின்றனர். பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர். இதைக்கண்டு ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போரைத் துவக்குகிறார்.
பதவி ஆசை கொண்ட சில மண்ணின் மைந்தர்களின் உதவியுடன் பழசிராஜாவை எதிர்க்கிறது ஆங்கிலப்படை. பழசியின் தளபதிகள் ஒவ்வொருவராக மடிகிறார்கள். இறுதி சண்டைக்கு ஆயத்தமாகிறார் பழசிராஜா. ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் என்கிறார்கள் நலம் விரும்பிகள். பழசிராஜா சரணடைந்தாரா? அல்லது ஆங்கிலேயர்களை வென்றாரா என்பது மீதிக் கதை.
பழசிராஜாவாக வரும் மம்முட்டி ஒவ்வொரு காட்சியிலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கைதியாக பிடிப்பட்ட ஆங்கில கலெக்டரை மனிதாபிமானத்துடன் நடத்துவதும், “ஆயுதங்களை நேசித்த அளவுக்கு, உன்னை நேசிக்க மறந்துவிட்டேன்” என்று மனைவி கனிகாவிடம் விடைபெறும்போதும் உருக வைக்கிறார்.
பழசிராஜாவின் தளபதியாக எடச்சன் குங்கன் கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார், விசுவாசமிக்க வீரனாக மின்னுவதோடு, பழசிராஜாவுக்கு செஞ்சோற்று கடன் தீர்க்கும் கர்ணனாக கலங்க வைக்கிறார். துரோகி சுமனை பழி தீர்க்கும் இடத்திலும் சபாஷ் போட வைக்கிறார்.
கனிகா, பழசிராஜாவின் மனைவியாக வந்து அவர் பிரிவில் அழுதும், உடன் இருக்கும்போது துடித்தும் உருக வைக்கிறார். மலைவாழ் மக்கள் தலைவனாக வரும் மனோஜ் கே.ஜெயன் மனதில் நிற்கிறார்.
பெண் போராளி பத்மப்ரியாவின் மெனக்கெடல் ரொம்பவே அசத்தல். வில் அம்பு, வேல்கம்பு, துப்பாக்கி என்று சகலத்திலும் முனைப்பு காட்டியிருக்கிறார். மரத்தின் உச்சியிலிருந்து சரிந்து கொண்டே வந்து சண்டையிடும் அவரது பேரார்வம் கூர்மையாக ரசிக்கப்பட வேண்டிய ஒன்று.
விடுதலைக்காக, போராடுகிறவர்களை தூக்கிலிடுவதைக் கண்டித்து ஆங்கில கலெக்டரின் மனைவி அவரை பிரிவதும், கடைசியில் பழசிராஜாவை புரிந்து கொள்ளும் கலெக்டர் அவர் வீரச்சாவை சந்திக்க வாய்ப்பளிப்பதும், அவருக்கு ஆங்கிலேய முறைப்படி இறுதி மரியாதை செய்ய வைப்பதும் இயக்குனர் மின்னும் இடங்கள்.
வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்படும் படங்களுக்கு சுவையான சம்பவங்கள் மற்றும் சரித்திரபூர்வமான நம்பகத் தன்மை இரண்டுமே முக்கியம். இந்த இரண்டுமே படத்தில் கொஞ்சம் கம்மிதான் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
மலையாளத்தில் வசனம் எழுதியிருக்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர். தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். “பிறந்ததிலிருந்தே ஒரு நிழல் கூடவே வந்திட்டு இருக்கு. அது என்னைக்காவது திரும்பி எதிர்லே விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதுதான் மரணம்…” இப்படி படம் நெடுகிலும் ஜீவனுள்ள வசனங்கள்.
படத்தின் முக்கிய பலம் இளையராஜாவின் இசை. ஆரம்பக் காட்சிகள் வரலாற்று நாடகம் போல துண்டுத் துண்டாகத் தெரிய, அதை பெரும்பாடுபட்டு கோர்வையாக்கித் தருகிறார் தனது பின்னணி இசை மூலம். பாடல்களில் மலையாள வாசம். “ஆதிமுதல் காலம் பூத்ததிங்கே” என்ற பாடல் சுகமோ சுகம்.
ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி. வாள் காற்றை கிழிப்பதையும், மழைத்துளி முற்றத்தில் விழுவதையும், அவ்வளவு ஏன்… உட்காருகிற சத்தத்தைக் கூட துல்லியமாக பதிவு செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டியும், ஆர்ட் டைரக்டர் டி.முத்துராஜும் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு தந்திருக்கிறார்கள்.
புகழ்பெற்ற வரலாற்று படங்களின் வரிசையில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த பழசிராஜாவும் ஒரு பொக்கிஷம்தான் என்றால் மிகையல்ல!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலைவனச்சோலை – திரைவிமர்சனம்
» வேங்கை – திரைவிமர்சனம்
» மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
» காவலன் – திரைவிமர்சனம்
» மழைக்காலம் – திரைவிமர்சனம்
» வேங்கை – திரைவிமர்சனம்
» மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
» காவலன் – திரைவிமர்சனம்
» மழைக்காலம் – திரைவிமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum