இளைஞன் – திரைவிமர்சனம்
Page 1 of 1
இளைஞன் – திரைவிமர்சனம்
கலைஞர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனத்தில் வந்துள்ள படம். கவிஞர் பா.விஜய் நாயகன். 1959களில் நடக்கிற கதை. கப்பல் கட்டும் கம்பெனி நடத்துபவர் சரத்பாபு. இரக்க மனதுக்காரர்.
வயதானதும் பொறுப்புகளை மகன் சுமன் வசம் ஒப்படைக்கிறார். சுமன், தொழிலாளர்களை கசக்கி பிழிகிறார். வெளியுலகை காட்டாமல் அடைத்து போட்டு அதிக நேரம் வேலை வாங்குகிறார். எதிர்ப்பவர்கள் அடியாட்களால் கொல்லப்படுகின்றனர்.
தொழிலாளர்கள் மதிக்கும் நாசரையும் கொல்கின்றனர். அவர் மகன் பா.விஜய் வெகுண்டெழுகிறார். கப்பல் கட்டும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து சுமனுக்கு எதிராக தொழிலாளர்களை ஒற்றுமை படுத்துகிறார். வெளிநாட்டில் படித்து விட்டு வரும் மீரா ஜாஸ்மினும் அண்ணன் நடத்தைகளில் வெறுப்பாகி பா.விஜய்யுடன் கைகோர்க்கிறார்.
பீரங்கி, வெடிகுண்டுகள் என ஆயுத போராட்டத்துக்கு தயாராகின்றன. பா.விஜய் தாய் குஷ்பு தடுத்து அகிம்சை வழியில் உரிமைகளை மீட்டெடுக்க கோருகிறார். அடி மைத்தனத்தில் இருந்து தொழிலாளர்கள் எப்படி மீட்கப்படுகின்றனர் என்பது கிளைமாக்ஸ்.
கலைஞர் கருணாநிதியின் அழுத்தமான திரைக்கதையில், காட்சிகள் விறு விறுப்பாக நகர்கிறது. முதலாளி, தொழிலாளர் வர்க்க போராட்டத்தில் தெறிக்கும் அவர் வசனங்களில் பொறி. பிரமாண்ட கப்பல் கட்டும் அரங்குகள் கொத்தடிமை தொழில்.
காஸ்ட்யூம்கள் என காட்சிகளின் பிரம்மாண்டத்தில் வரலாற்று காலத்துக்கு இழுத்து செல்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. வீராவேசமான பேச்சுக் களால் சுயமரியாதையை தட்டியெழுப்பும் கார்க்கி கேரக்டரில் வாழ்கிறார் பா.விஜய். எலும்பு நோக உழைத்து அசதியாக வரும் தந்தைக்கு கால் பிடித்து விடுவது…
தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு புரட்சிக்கு தயார் செய்த ஆயுதங்களை மண்ணில் புதைப்பது… தாய் துன்புறுத்தப்படுவதை கண்டு பிணைக் கப்பட்ட சங்கிலியில் இருந்து திமிறுவது என தேர்ந்த நடிப்பில் பளிச்சிடுகிறார். கிளைமாக்ஸ் சண்டையில் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு இணையான வேகம்…
தொழிலாளர்களுக்காக வாதாடும் மீரா ஜாஸ்மின், பா.விஜய் மேல் காதல் வயப்படும் ரம்யா நம்பீசன் கேரக்டர்களும் கச்சிதம். குஷ்பு அன்பும் ஆவேசமுமான அழகான அம்மா. சுமன்- நமீதா, கொடூர வில்ல தம்பதி. சரத்பாபுவை கொன்று கடலில் வீசுவது, தொழிலாளர்களை நம்ப வைத்து காலை வாறுவது என கொடூரத்தில் உலுக்குகின்றனர்.
வடிவேலு, கருணாஸ் சிரிக்க வைக்கின்றனர். நாசர், டெல்லி கணேஷ், மணிவண்ணன், சரத்பாபு, தியாகு, ஒய்.ஜி.மகேந்திரன் கேரக்டர்ககளும் வலுசேர்க்கின்றன. நான் கடவுன் ராஜேந்திரன் மிரட்டல் வில்லன். வித்யாசாகர் இசையில் பாடல்கள் இனிமை. பி.எல்.சஞ்சய் கேமரா வரலாற்று காலத்தை கண்முன் நிறுத்துகிறது. கலைஞரின் கை வண்ணத்தில் (வி)வேகமான இளைஞன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தியாவில் தேடப்பட்ட இலங்கை இளைஞன் கைது!
» இளைஞன் அழைப்பிதழ் செலவு மட்டும் பல லட்சம்!
» தொட்டுப்பார் – திரைவிமர்சனம்
» ராவணன் – திரைவிமர்சனம்
» வீரசேகரன் – திரைவிமர்சனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum