தொட்டுப்பார் – திரைவிமர்சனம்
Page 1 of 1
தொட்டுப்பார் – திரைவிமர்சனம்
கோர்ட்டில் குற்றவாளிகளை ஜாமீனில் எடுக்க உதவி காசு சம்பாதிக்கும் இளைஞன் விதார்த். அவருக்கு உள்ளூர் போலீஸ் அதிகாரி வி.எம்.ஹனீபா துணையாக இருக்கிறார். வசூல் பணத்தை இருவரும் பங்கு போட்டு கொள்கின்றனர்.
போலீஸ் சந்தேகத்தின் பேரில் பிடிக்கும் ஒருவனையும் தனக்கு தெரிந்தவன் என சொல்லி காசு வாங்கி வெளியே விட வைக்கிறார். அவன் மந்திரியை தீர்த்து கட்டி விட்டு தப்புகிறான். கொலையாளியுடன் விதார்த்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து போலீஸ் தேடுகிறது. அனீபா ரகசியமாக அவரை வெளியூர் அனுப்பி வைக்கிறார்.
சென்னை வரும் விதார்த் மதுக்கடையில் வேலைக்கு சேர்கிறார்.
பாரில் போதையில் விழுந்து கிடக்கும் அழகம் பெருமாளை வீட்டில் கொண்டு சேர்த்து அவர் குடும்பத்தாருடனும் நெருக்கமாகிறார்.
அப்போது விதார்த்தை கொல்ல ரவுடி கும்பல் முயற்சிக்கிறது. இதில் அனீபா கொல்லப்படுகிறார். போலீசும் விதார்த்தை துரத்துகிறது. இதிலிருந்து விதார்த் எப்படி தப்புகிறார் என்பது விறு விறுப்பான கிளைமாக்ஸ்.
மதுக்கடையில் போதை, வம்பு சண்டைஎன விதார்த் அறிமுகமாகும் ஆரம்பமே அமர்களம். விதார்த்தும், அனீபாவும் காசுக்காக குற்றவாளிகளுக்கு ஜாமீன் போடுவதும், அதன் மூலம் கொலைப் பழியில் சிக்குவதும் பரபரப்பு.
மதுக்கடையில் வேலை பார்த்து அழகம்பெருமாள் அனுஹாசன் தம்பதியுடன் பாசத்தால் ஒட்டிக்கொள்ளும் சீன்கள் சென்டி மென்ட் ரகம்.
குடிகாரன் போதையில் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை விதார்த்துக்கு டிப்ஸ் கொடுப்பதும் அவன் மனை வியும் குழந்தையும் பசி பட்டினியால் தவிப்பதும் இதயத்தை பிழிகின்றன.
ரவுடிகளும், போலீசும் விதார்த்தை பிடிக்க துரத்தியதும் சீன்கள் ரெக்கை கட்டுகின்றன. ரவுடிகள் தலைவனாக ரமணா, அறிமுகமாவதும் அவர் திருநங்கை என்ற சஸ்பென்ஸ் உடைபடுவதும் அதிர்ச்சி திருப்பங்கள். ரமணாவும் விதார்த்தும் மோதும் கிளை மாக்ஸ் சண்டை அனல். ரமணா வில்லத் தனம் மிரட்டல். அனீபா வலு சேர்க்கிறார். லக்ஷனா காதலியாக வந்து போகிறார்.
அயன் ஜெகன், மயில்சாமி கூட்டணியின் காமெடி சிரிக்க வைக்கிறது. வித்தியாசமான கதை. களத்தில் விறு விறுப்பான காட்சிகளுடன் படத்தில் ஒன்ற வைக்கிறார் இயக்குனர் நந்து. ஸ்ரீகாந்த் தேவா, இசையில் பாடல்கள் இனிமை. சசிக்குமார் ஒளிப் பதிவு பலம்.
தலைப்புக்கு ஏற்ப இன்னும் வலுவாக ஆக்ஷன் சீன்களை தொகுத்து இருக்கலாம். கதை மதுக்கடையிலும், அனுஹாசன் வீட்டிலும் வெகு நேரம் முடங்குவதை தவிர்த்து இருக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேங்கை – திரைவிமர்சனம்
» மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
» காவலன் – திரைவிமர்சனம்
» மழைக்காலம் – திரைவிமர்சனம்
» இளைஞன் – திரைவிமர்சனம்
» மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
» காவலன் – திரைவிமர்சனம்
» மழைக்காலம் – திரைவிமர்சனம்
» இளைஞன் – திரைவிமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum