மதுபானத்தை விட பெண்கள் மலிவு: சர்ச்சையில் தம் மாரோ தம் படம்
Page 1 of 1

டைரக்டர் ரோகன் சிப்பி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, பிபாஷா பாசு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தம் மாரோ தம்”. இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அதில் ஒரு வசனத்தில் கோவாவில் மதுவை விட பெண்கள் மலிவு என்று இடம்பெற்றுள்ளது. இதனை நடிகை பிபாஷா பேசி இருக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கோவாவில் இருக்கும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கொதித்துப் போய் உள்ளனர்.
கோவா நகரின் இமேஜைக் கெடுப்பதற்காகவே படத்தில் இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது. படத்திலிருந்து இந்த வசனத்தை நீக்காவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கூறியிருக்கின்றனர் கோவாவில் இருக்கும் சமூக ஆர்வலர்கள்.
சிவசேனா கட்சியின் கோவா தலைவர் பிலிப் டிசூஸா கூறுகையில், இதே போல ஒரு காட்சியை வேறு எந்த மாநிலத்திலாவது போய் எடுத்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா… கோவாவை இழிவுபடுத்துவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இனி கோவாவில் படமெடுக்க வருபவர்கள், முதலில் படத்தின் கதை, திரைக்கதை உள்ளிட்டவைகளை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.
இதனிடையே தம் மாரோ தம் படத்தின் வசனம் அதிருப்திக்குள்ளாகி இருப்பதாக கோவா முதல்வர் திகம்பர் காமத் தெரிவித்துள்ளார். மேலும் படத்தை தடை செய்வது குறித்து மும்பை கோர்ட்டில் முறையிட இருப்பதாகவும் அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்கள் படம் - கௌதமின் சமாளிப்பு
» புதிய திருப்பங்கள் பெண்கள் கடத்தல் பற்றிய படம்
» சர்ச்சையில் பர்ஃபி
» மலிவு விலையில் விஸ்வரூபம் திருட்டு டிவிடி
» சர்ச்சையில் இசை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum