தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய திருப்பங்கள் பெண்கள் கடத்தல் பற்றிய படம்

Go down

புதிய திருப்பங்கள் பெண்கள் கடத்தல் பற்றிய படம்  Empty புதிய திருப்பங்கள் பெண்கள் கடத்தல் பற்றிய படம்

Post  ishwarya Tue Mar 12, 2013 11:42 am

சென்னை : ‘கண்டேன்’ படத்தை அடுத்து ஸ்ரீசிவசெல்வநாயகி அம்மன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் படம், ‘புதிய திருப்பங்கள்’. ஒளிப்பதிவு மது அம்பாட். இசை வித்யாசாகர். தேசிய விருது பெற்ற ‘சிருங்காரம்’ படத்தை இயக்கிய சாரதா ராமநாதன் இயக்கி உள்ளார். நந்தா, ஆண்ட்ரியா, சுர்வின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இளம் பெண்கள் கடத்தல் பற்றிய கதையை கொண்டது. இதுபற்றி இயக்குனர் சாரதா ராமநாதன் கூறியதாவது:

ஹீரோ நந்தாவின் வாழ்க்கையில் நடக்கும் சுவையான திருப்பங்கள்தான் இந்தப் படம். படத்துக்காக இளம் பெண்கள் கடத்தப்படுவது பற்றி ஆய்வு செய்தேன். கடத்தல் குற்றவாளிகளை சிறையில் சிறப்பு அனுமதி வாங்கி பேட்டி எடுத்தேன். இந்தக் கடத்தல் சம்பவத்துக்குப் பின்னால் பெரும் புள்ளிகள் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி தகவல். பெரும்பாலும் பாலியல் பலாத்காரத்துக்காகவே பெண்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட பெண் ஒருவரைச் சந்தித்தும் கருத்து கேட்டு இந்தப் படத்தின் கதையை உருவாக்கி உள்ளேன். ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படியாக இருக்கும். ஆண்ட்ரியாவும் நந்தாவும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum