தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை தமிழனுக்கு தடைவிதிப்பதா; நாம் அவர்களுக்கு தடை விதிப்போம்: போராளி இலங்கையில் ரிலீசாகாது – சசிக்குமார் அதிரடி

Go down

இலங்கை தமிழனுக்கு தடைவிதிப்பதா; நாம் அவர்களுக்கு தடை விதிப்போம்: போராளி இலங்கையில் ரிலீசாகாது – சசிக்குமார் அதிரடி Empty இலங்கை தமிழனுக்கு தடைவிதிப்பதா; நாம் அவர்களுக்கு தடை விதிப்போம்: போராளி இலங்கையில் ரிலீசாகாது – சசிக்குமார் அதிரடி

Post  ishwarya Wed Apr 10, 2013 4:51 pm

சட்டென்று உணர்ச்சிவசப்படுவதுதான் கலைஞர்களின் இயல்பு. அதுவும் இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பற்றி நினைத்தால் மேலும் உணர்ச்சி பிழம்பாகிவிடுவதும் அவர்கள்தான். லேட்டஸ்ட் கொந்தளிப்பு சசிகுமாரிடமிருந்து. போராளி படத்தில் ஹீரோவாக நடிக்கும் அவர், இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை இலங்கைக்கு தரவில்லையாம் அவர்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சசி,

துக்க வீட்டில் சினிமா பார்ப்பது போலதான் நாம் படத்தை இலங்கையில் வெளியிடுவதும். தமிழர்களை பற்றி எது பேசினாலும் அந்த படத்தை வெளியிட தடை விதிப்பது இலங்கை அரசின் வழக்கமாக இருக்கிறது. அவர்கள் என்ன நமக்கு தடை விதிப்பது? நாம் அவர்களுக்கு தடை விதிப்போம் என்றுதான் போராளி படத்தின் எப்எம்எஸ் உரிமையை தரவில்லை என்று கூறியிருக்கிறார் சசி.

இந்த கருத்தை ஆமோதித்திருக்கிறார் 7 ஆம் அறிவு படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி. இந்த படத்தை இலங்கைக்கு விற்க வேண்டாம் என்றுதான் அவரும் முடிவெடுத்திருந்தாராம். ஆனால் யார் யார் கைக்கோ படம் மாறி, அவர்கள் சம்மதித்தில்தான் இந்த படம் இலங்கையில் வெளியானது என்றும் கூறியிருக்கிறார் உதயநிதி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum