விக்ரம் – சசிக்குமார் புகைச்சல்! என்னதான் நடக்கிறது?
Page 1 of 1

சினிமா உலகில் புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதும், மோதிக் கொள்வதும், பொது இடங்களில் கைகோர்த்துக் கொள்வதும் இந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வ சாதாரணம்.
இதற்கு ஷாரூக்கான், சல்மான்கான் சிறந்த உதாரணம். “நாயை” உதாரணம் காட்டிக்கூட இருவரும் குடும்பிடிச்சண்டை போட்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலம் காலமாக நட்சத்திரங்கள் நண்பர்களாகவே பழகி வந்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். – சிவாஜியில் தொடங்கி, விஜய் – அஜித் வரைக்கும் முன்னணி நாயகர்கள் நட்பு பாராட்டி வருகிறார்கள். அதிலும் இப்போதைய இளம் நாயகர்களான தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா, சிபி, சாந்தனு, பிரசன்னா, நரேன், ஸ்ரீ்காந்த், பரத், விஷ்ணு, அஜ்மல் உள்ளிட்ட நடிகர்கள் ஒருவரது பட விழாவில் மற்றவர் கலந்து கொண்டு வாழ்த்தும் அளவுக்கு நட்புடன் இருக்கிறார்கள்.
ரசிகர்கள் இருவேறு பிரிவுகளாக வேறுபட்டு அடித்துக் கொண்டாலும் நடிகர்கள் தங்களுக்கும் பகையை வளர்த்துக் கொண்டதில்லை.
ஆனால் சமீப நாட்களாக தமிழ் திரையுலகில் இரு உச்ச நட்சத்திரங்கள் தங்களுக்கிடையில் புகைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறுயாருமல்ல. தேசிய விருது நாயகன் விக்ரமும், தற்போது தன் படத்திற்காக தேசியவிருது பெற்ற தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமாரும்தான்.
பிரச்சனைக்கான காரணத்தை தேடினால் படத்தயாரிப்பு விவகாரத்தைத்தான் சொல்கிறார்கள். சசிகுமார் தற்போது இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தினை ஆரம்பத்தில் விக்ரம், சசிகுமார் இருவரும் இணைந்துதான் தயாரித்தார்கள். பாதிப்படம் எடுக்கப்பட்ட நிலையில் ஏனோ விக்ரம் படத் தயாரிப்பு வேலைகளில் இருந்து விலகிக்கொண்டார்.
ஆனாலும் மனம் தளராத சசிக்குமார் தனது சொந்த பட நிறுவனம் சார்பில் அந்த படத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதேநேரம் இப்படி சொல்லாமல், கொள்ளாமல் திடீரென தயாரிப்பு வேலைகளில் இருந்து விலகிக் கொண்டது அழகா? என்ற ரீதியில்தான் இருவருக்குமிடையில் புகைச்சல் ஆரம்பமாகியிருக்கிறது.
அந்த புகைச்சல் பூதாகராமாகி படத்தை விழுங்கும் முன் சுதாரித்துக் கொண்ட சசிக்குமார், விக்ரம் வில்லங்கம் செய்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தகட்ட பணிகளில் விறுவிறுப்பாகி விட்டார். தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை என நினைத்தாரோ என்னவோ விக்ரம். சமீபத்தில் வெளியான தேசிய விருது அறிவிப்பில் சசிக்குமாரின் பசங்க படம் இடம் பெற்றிருந்ததற்கு வாழ்த்து தெரிவிப்பதுபோன்ற பாவனையில் சசிக்குமாரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
“பசங்க” திரைப்படம் தேசியவிருது பெற்றதற்காக பாராட்டி பேசுகையில் “சசிக்குமார் எனது சிறந்த நண்பர் இருவரும் எங்கள் சிந்தனைகளை அடிக்கடி பகிர்ந்து கொள்ளவோம். அப்படியாகதான் இருவரும் இணைந்து படதயாரிப்பு வேலையிலும் இறங்கியிருந்தோம். ஆனாலும் நாங்கள் திட்டமிட்ட அந்த செலவினை தாண்டி திரைப்பட தயாரிப்பு நீண்டுகொண்டிருப்பதனால்தான் நான் தயாரிப்பு பணியிலிருந்து விலகினேன். இதுதவிர எங்கள் இருவருக்குமிடையில் எந்த மனகசப்பும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.
தேசியவிருது பெற்றதற்காக நேரடியாக வாழ்த்துக்கள் சொல்லாமல் இப்படி பத்திரிகைகள் வாயிலாக வாழ்த்தியதிலிருந்தே ஏதோ உள்புகைச்சல்கள் இருப்பது தெரிகிறதல்லவா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் நடிப்பு-மீனா குடும்பத்தில் புகைச்சல்
» எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது சண்டை வருவதும், ஒருவரையொருவர் சாபமிடுவதும் நடக்கிறது. இந்த சம்பவங்கள் அந்த நிகழ்ச்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விடுகின்றன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்ன பரிகாரம்?
» கும்கி' நாயகியோடு சசிக்குமார்!
» மாணவர்களுக்கு டைரக்டர் சசிக்குமார் அட்வைஸ்!
» விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? – நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum