மாணவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சவோ, துவளவோ கூடாது! - சசிக்குமார்
Page 1 of 1
மாணவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சவோ, துவளவோ கூடாது! - சசிக்குமார்
மாணவப்பருவத்தில் எதற்காகவும், எந்த நிலையிலும் தோல்வியைக் கண்டு அஞ்சவோ, துவளவோ கூடாது என்று டைரக்டர் சசிக்குமார் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். சசிக்குமார் சமீபத்தில் கும்பகோணத்தில் நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: "எனக்கும், இந்த அன்னை கல்லூரிக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு உண்டு. ஆனாலும் கடந்த 4 ஆண்டுகள் தான் இந்த கல்லூரி விழாவில் பங்கேற்று வருகிறேன். இந்த கல்லூரியை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், படிக்கும் மாணவர்கள், நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு சில நல்ல திட்டங்களை செய்துவருகிறார்கள். அதாவது ஏழ்மையிலிருந்தும் நன்றாக படிக்க்கூடிய மாணவர்கள், தன்னுடைய நிதி வசதி காரணமாக படிக்க இயலாமல் போகிறது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு, இவர்களுடன் பயிலும் சக மாணவர்கள் தேர்வு கட்டணம் உள்பட கல்வி உதவி தொகையை வழங்கி உதவுகிறார்கள். மேலும், மாணவர்கள் வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக கருதக்கூடிய மனப்பக்குவம் பெற வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தோல்வியைக் கண்டு அஞ்சவோ, துவளவோ கூடாது" என்று கூறினார். தன்னை, மாணவர்கள் மறு மலர்ச்சி திட்டத்தில் இணைத்துக் கொண்டு அதற்காக ரூ.15 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாணவர்கள் தோல்வியை கண்டு துவளக்கூடாது:திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேச்சு
» கிராமத்தில் பிறந்ததற்காக மாணவர்கள் வெட்கப்படக் கூடாது!- சிவகுமார்
» இலங்கை தமிழனுக்கு தடைவிதிப்பதா; நாம் அவர்களுக்கு தடை விதிப்போம்: போராளி இலங்கையில் ரிலீசாகாது – சசிக்குமார் அதிரடி
» கும்கி' நாயகியோடு சசிக்குமார்!
» வெள்ளை வெளேல் என்று இருப்பவர்கள் சில விஷயங்களை செய்யவேக் கூடாது. அதாவது அவர்கள் நிறத்திலேயே வெள்ளையாக இருப்பதால் அதிகமாக பவுடர் பூசிக் கொள்ளக் கூடாது. அப்படி செய்யும் போது அவர்களது அழகை பவுடர் குலைத்து விடும். அதேப்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum