தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்னைப்பற்றி தவறான வதந்திகள்: லட்சுமிராய் ஆவேசம்

Go down

என்னைப்பற்றி தவறான வதந்திகள்: லட்சுமிராய் ஆவேசம் Empty என்னைப்பற்றி தவறான வதந்திகள்: லட்சுமிராய் ஆவேசம்

Post  ishwarya Mon Apr 01, 2013 5:56 pm

லட்சுமிராய் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. கிரிக்கெட் வீரர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தனி விமானத்தில் வந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்து லட்சுமிராய் கூறியதாவது:-

என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. சினிமாவுக்கு வந்த புதிதில் இவற்றை கண்டுகொள்ளாமல் இருந்தேன். பதில் சொல்வதையும் தவிர்த்தேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. என்னைப் பற்றிய வதந்திகளுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கிறேன்.

சினிமாவில் எனக்கு குரு கிடையாது. எந்த பின்புலமும் இல்லாமல்தான் நடிக்க வந்தேன். ஆரம்பத்தில் தப்பான படங்களில் நடித்தேன். அதில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன். நல்ல படங்களில் நடிக்கவேண்டும் என்ற உணர்வு தற்போது ஏற்பட்டு உள்ளது. நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவசரப்படவில்லை. முன்னணி நடிகையாகும் ஆசையும் இல்லை.

நம்பர் ஒன் இடத்துக்கு போனால் அதை தக்க வைப்பது கஷ்டம். அதன்பிறகு மார்க்கெட் விழுந்து, வீட்டுக்கு போகவும் தயாராக இருக்கவேண்டும். நான் நிதானமாக அடியெடுத்து வைக்கிறேன்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தனி விமானத்தில் வந்ததாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. மலையாளத்தில் எனக்கு நல்ல படங்கள் வருகின்றன. ஆனால் தமிழ், தெலுங்கில் என்னை கவர்ச்சியாகவே பார்க்கிறார்கள்.

இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்புகிறார்கள்: டி.ராஜேந்தர்
» என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன: நடிகை சுனைனா வருத்தம்
» நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள் – டி.ராஜேந்தர் கண்டனம்
» விஜயலட்சுமியை சுற்றி வரும் வதந்திகள்
» 1 கோடி 75 லட்சம் சம்பளம் கேட்கிறேனா? எனக்கு எதிராக வதந்திகள்-சமந்தா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum