தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

1 கோடி 75 லட்சம் சம்பளம் கேட்கிறேனா? எனக்கு எதிராக வதந்திகள்-சமந்தா

Go down

1 கோடி 75 லட்சம் சம்பளம் கேட்கிறேனா? எனக்கு எதிராக வதந்திகள்-சமந்தா Empty 1 கோடி 75 லட்சம் சம்பளம் கேட்கிறேனா? எனக்கு எதிராக வதந்திகள்-சமந்தா

Post  ishwarya Sat May 04, 2013 1:57 pm

தெலுங்கில் பிசியாக நடிக்கிறார் சமந்தா. தமிழ் படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன.

இதையடுத்து சம்பளத்தை உயர்த்தி விட்டதாக வதந்திகள் பரவியுள்ளன. இதற்கு பதில் அளித்து ஐதராபாத்தில் சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

தமிழ், தெலுங்கில் நான் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டாகியுள்ளது. மேலும் அரை டஜன் படங்கள் கைவசம் இருக்கிறது. தெலுங்கில் நடித்த ஆட்டோ நகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது.

நான் ரூ.1 கோடியே 75 லட்சம் சம்பளம் கேட்பதாக செய்திகள் பரவியுள்ளன. இது தவறான தகவல். நான் யாரிடமும் அவ்வளவு தொகை கேட்கவில்லை.

எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை விதிக்கும் அளவுக்கு தைரியம் இல்லை.

ஆறு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். இந்த படங்களின் தகாரிப்பாளர்களிடம் விசாரித்து நான் ரூ.1 கோடியே 75 லட்சம் சம்பளம் வாங்கியதாக நிரூபித்தால் வாங்கிய சம்பளம் அனைத்தையும் திருப்பி தந்துவிட தயாராக இருக்கிறேன். சம்பளம் விஷயத்தில் எனக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளன.

என் அதிர்ஷ்டத்தால் படங்கள் நன்றாக ஓடுகின்றன. அதில் சந்தோஷம் அடைகிறேன். சம்பளம் இன்னும் ரூ.1 கோடியை எட்டவில்லை.

இவ்வாறு சமந்தா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum