தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள் – டி.ராஜேந்தர் கண்டனம்

Go down

நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள் – டி.ராஜேந்தர் கண்டனம் Empty நண்பர்கள் கைது என்பதா? நடிகர் சிம்பு பற்றி தவறான வதந்திகள் – டி.ராஜேந்தர் கண்டனம்

Post  ishwarya Wed Apr 10, 2013 1:49 pm

நீலாங்கரை கடற்கரை அருகில் பப் ஒன்றில் இளம் பெண்ணை கிண்டல் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தப்பி ஒடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள் அந்த “பப்”பில் தனியார் நிறுவன மானேஜர் மனைவியுடன் வந்து இருந்ததாகவும் போதையில் அப்பெண்ணுடன் சிலர் ஆட விரும்பியதால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதில் பெண்ணின் கணவர் தாக்கப்பட்டார்.

பெண்ணிடம் சில்மிஷத்திலும் தாக்குதலிலும் ஈடுபட்டதாக அந்த 3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் நடிகர் சிம்புவின் நண்பர்கள் என்று செய்தி வெளியானது. இதனை சிம்புவின் தந்தையும், சினிமா இயக்குனருமான டி.ராஜேந்தர் மறுத்தார். அவர் கூறியதாவது:-

சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது. சிம்பு நடிகர் என்பதால் செல்லும் இடங்களில் நிறைய பேர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு செல்லும்போது பலர் இதுபோல் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களையெல்லாம் நண்பர்கள் என்று சொல்ல முடியுமா?

சிலர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் சிம்புவின் நண்பர்கள் என்றும் செய்தி வந்துள்ளது. சிம்பு என்னிடம் அப்படி நண்பர்கள் யாரும் கிடையாது என்றார். திட்டமிட்டு இந்த வதந்தி பரப்பப்பட்டு உள்ளது. இதன் மேல் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்புகிறார்கள்: டி.ராஜேந்தர்
» என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன: நடிகை சுனைனா வருத்தம்
» என்னைப் பற்றி வதந்திகள்: தெலுங்கு நடிகர் ராணாவை காதலிக்கவில்லை – திரிஷா மறுப்பு
» அன்னாவை கைது செய்தது தவறு: தெலுங்கு, கன்னட நடிகர், நடிகையர் கண்டனம்
» என்னைப்பற்றி தவறான வதந்திகள்: லட்சுமிராய் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum