தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

Go down

 விஸ்வரூபத்திற்கு யு/ஏ சான்றிதழ்! Empty விஸ்வரூபத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

Post  ishwarya Sat Mar 30, 2013 5:13 pm

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் தணிக்கை செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தி பதிப்பிற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தின் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். அமெரிக்கா, அப்கானிஸ்தான் நாடுகளில் இதுவரை தமிழ்ப் படங்களின் சூட்டிங் நடக்காத இடங்களில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நவீன ஒலி தொழில்நுட்பமான 3 டி ஒலியில் இப்படத்தை கமல் உருவாக்கியுள்ளார்.

ஹாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பையே கமலுக்கு பெற்றுத் தந்துள்ள விஸ்வரூபம், தமிழ், இந்தி மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. தெலுங்கிலும் டப் ஆகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவரும் சூழலில், இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பினர். தமிழ் பதிப்பை பார்த்த தணிக்கை குழுவினர் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு யு.ஏ. சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தி விஸ்வரூபம் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் காட்சிகள் எதையும் நீக்காமல் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum