திருப்பாவை - 7
Page 1 of 1
திருப்பாவை - 7
கீசு கீசென்று எங்கும் ஆணை சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்!
பொருள்.......
பேய்போல் உறங்குகின்ற பெண்ணே! ஆனைச்சாத்தான் பறவைகள் கீசு கீசு என்று கத்துகின்ற ஒலி உன் காரில் விழவில்லையா? நறுமணம் மிகுந்த கூந்தலையுடைய ஆயர்குல பெண்கள் மத்தினால் தயில் கடையும் ஒசை உன் காதில் கேட்கவில்லைய? தலைமை குணம் மிக்க பெண்ணே! உலகை காக்கும் ஸ்ரீ மன் நாராயணனை எண்ணி நாங்கள் பாடுகிறோம். அதை கேட்டுமா நீ படுக்கையில் இருந்து எழாமல் இருக்கிறாய் ஒளி மிக்கவனே எழுந்து வந்து கதவை திறப்பாயாக!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum