திருப்பாவை - 10
Page 1 of 1
திருப்பாவை - 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்றவனந்த லிடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
பொருள்..... பாவை நோன்பு விரதமிருந்து சுவர்க்கம் செல்ல போகின்ற பெணே! நாங்கள் உன்னை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. எழுந்திருக்கா விட்டாலும் பரவாயில்லை. பதில் கூடவா கூறக்கூடாது? நறுமணம் மிக்க துளசி மாலையை தலையில் அணிந்திருக்கும் நாராயணனை நாம் துதித்தால் உடனே அருள் புரிவான்.
நான் கேட்கும் வரங்களைத் தருவான். முன்பு இராமபிரானிடம் தோல்வியடைந்து எமன்வாசலில் விழுந்த கும்ப கர்ணன் உனக்கு தூக்கத்தை தந்தானா? கிடைத்ததற்கரிய சிறந்த பெண்ணே உன் சோம்பலை விட்டு உறக்கம் நீங்கி கதவை

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum