திருப்பாவை 9
Page 1 of 1
திருப்பாவை 9
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன்
மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்
பொருள்.......
துய்மையான மாணிக்க கற்களால் கட்டப்பட்ட மாளிகையில் விளக்குகள் எரிகின்றன. நறுமணம் எங்கும் பரவுகிறது அங்கே உறங்கிக் கொண்டிருக்கும் மாமன்மகளே நீ கதவை திறப்பாய் அத்தையே உங்கள் மகளை எழுப்பமாட்டீரோ? அவள் என்ன செவிடா? அல்லது நேரம் தூங்கும்படி மந்திரத்தினால் கட்டுப்பட்டாளோ? மாதவன் வைகுந்தன் என்று நாங்கள் பலமுறைகூறி அழைக்கின்றோம். அவள் வராமல் இருக்கிறாளே உங்கள் அழகு மகளை எழுப்பிவிடுங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum