திருப்பாவை 24
Page 1 of 1
திருப்பாவை 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
பொருள்...... வாமன் அவதாரம் எடுத்து மூவடியால் உலகை அளந்தவனே உன் பாதங்களை போற்றுகிறோம். சீதையை மீட்க இலங்கையில் இராவணனை அழித்தவனே உன் திறமையை போற்றுகிறோம். சக்கர வடிவம் எடுத்து சகடா சூரன் அழியும் படி காலால் உதைத்தவனே. உன்னுடைய புகழை போற்றுகிறோம்.
கன்றின் வடிவில் வந்த வத்சா சூரனையும் தடியால் அடித்துக் கொன்றாய். உன் திருவடிகளை வணங்குகிறோம். கோவர்த்தனம் என்னும் மலையை குடையாக்கி பசுக்களையும் மக்களையும் காத்தவனே பகைவர்களை எல்லாம் வென்று அழிக்கம் உன் வேலையும் போற்றி வணங்குகிறோம். எங்கள் நோன்புக்குரிய வேண்டுதலை உன்னிடம் கூறி உன் அருளைப் பெற வந்தோம் எங்களுக்கு அருள் புரிய வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum