திருப்பாவை 25
Page 1 of 1
திருப்பாவை 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
பொருள்.... ஓர் இரவுப்பொழுதில் கம்சனின் சிறையில் வாசுதேவனுக்கும், தேவகிக்கும் நீ மகளாக பிறந்தாய். அதே இரவில் ஆயர்பாடியில் நந்தகோபனின் மனைவி யசோதையின் மகனாக மறைந்து வளர்ந்தாய். இதைதாங்கி கொள்ள முடியாக கம்சன் உனக்கு தீங்கு செய்ய நினைத்தான்.
அவனுடைய தீய எண்ணங்களை அழித்து நெருப்பாக நின்று அவனுக்கு அச்சத்தை நின்று அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாய். நெடுமாலே உன்னை வணங்கி உன் அருள் தேடி வந்தோம். நாங்கள் நினைத்த வரத்தை தந்தால் அதனைப் பெற்று எல்லா செல்வங்களையும் விட அதைப்பெரிதாக கருதி உனது பெருமையை கருதி உனது பெருமையை நாங்கள் பாடி மகிழ்வோம். எங்கள் துயரங்கள் மறைந்து மகிழ்ச்சியுடன் இருப்போம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum